இந்த ஒரு விஷயம் தெரிந்தால்.. இனி ரேசன் அரிசியில் தான் சாதம் செய்து சாப்பிடுவீங்க!!

0
197

நம் நாட்டில் உள்ள ஏழை,எளிய மக்கள் ரேசனில் கொடுக்கப்படும் அரிசியை தான் நம்பி இருக்கிறார்கள்.பழுப்பு நிறத்தில் தடித்து காணப்படும் இந்த அரிசியில் வைட்டமின்கள்,துத்தநாகங்கள் நிறைந்து காணப்படுகிறது.அதுமட்டுமின்றி கொழுப்பு,சோடியம் போன்றவை இதில் குறைவு என்பதால் பாலிஷ் செய்யப்பட்டு விற்பனையாகும் அரிசியை விட ரேசன் அரிசி சத்து மிகுந்தவையாக திகழ்கிறது.

ரேசன் அரிசியில் சாதம் செய்து சாப்பிட பிடிக்காதவர்கள் அதில் உப்புமா,வடகம்,முறுக்கு,பொங்கல் போன்றவை செய்து சாப்பிடுகின்றனர்.பெரும்பாலானோர் ரேசன் அரிசியில் தான் இட்லி,தோசை மாவு அரைக்கிறார்கள்.

ரேசன் அரிசியை மலிவாக எண்ணுபவர்கள் அதன் மகிமை தெரிந்தால் நிச்சயம் அதை உணவாக எடுத்துக் கொள்வீர்கள்.காரணம் ரேசன் அரிசியில் அதிக மருத்துவ குணம் நிறைந்திருக்கிறது.

ரேசன் அரிசியில் உள்ள கார்போஹைட்ரேட் மூளையை சீராக செய்லபட வைக்கிறது.இதில் கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பருமனாக இருப்பவர்கள் ரேசன் அரிசி சாதம் எடுத்துக் கொள்ளலாம்.

ரேசன் அரிசி சாதம் குறைவாக சாப்பிட்டாலே வயிறு நிரம்பிவிடும் என்பதால் டயட் இருபவர்கள் இதை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.இந்திய பெண்களிடையே இரத்த சோகை அதிகரித்து வருகிறது.ரேசன் அரிசி உணவு இரத்த சோகையை கட்டுப்படுத்தும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ரேசன் அரிசியில் ஒருவித வாசனை வருவதால் அதை பலரும் சாதம் செய்ய மறுக்கின்றனர்.அரிசி ஊறவைக்கும் தண்ணீரில் சிறிது கல் உப்பு சேர்த்தால் வாசனை நீங்கிவிடும்.பாலிஷ் செய்து விற்கப்படும் விலை உயர்ந்த அரிசியில் உணவு சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை,கெட்ட கொலஸ்ட்ரால் போன்ற நோய் பாதிப்புகள் தான் ஏற்படும்.எனவே ரேசன் அரிசியின் மகிமை அறிந்து இனி பயன்படுத்துங்கள்.

Previous articleஒரு வீட்டிற்கு எத்தனை வாசப்படி இருந்தால் நல்லது? இந்த திசையில் அமைத்தால் பணம் கொட்டும்!!
Next articleஇது இருந்தால்.. DRIVING-இல் எந்த ஒரு டிராஃபிக் போலீஸும் உங்களை தடுத்து நிறுத்த மாட்டாங்க!!