இந்த ட்ரிக் தெரிந்தால்.. உங்கள் AC நாள் முழுவதும் ஓடினாலும் கரண்ட் பில் வரவே வராது!!

Photo of author

By Divya

இந்த ட்ரிக் தெரிந்தால்.. உங்கள் AC நாள் முழுவதும் ஓடினாலும் கரண்ட் பில் வரவே வராது!!

இந்த ஆண்டு கோடை காலத்தில் வழக்கத்தை விட அதிகமான வெப்பம் பதிவாகியிருந்தது.பகல் நேரங்களில் குறிப்பாக 12 முதல் 4 மணி வரை யாரும் வெளியில் போக வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கும் அளவிற்கு வெயில் கொளுத்தி எடுத்து.அதிகப்படியான வெயிலின் தாக்கம் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமானது.மக்கள்,வெப்ப பக்கவாத நோய்,அம்மை,தோல் நோய்,உடல் உஷ்ணம் போன்ற பல பாதிப்புகளை சந்தித்து வந்தனர்.

தற்பொழுது கோடைமழை பெய்தாலும் வெப்பத்தின் தாக்கம் மட்டும் குறைந்தபாடில்லை.இதனால் வீடுகளில் ஏசி இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.ஆனால் நாள் முழுவதும் ஏசி ஓடினால் வெப்பத்தால் ஏற்படும் சூட்டை விட கரண்ட் கட்டணத்தால் ஏற்படும் சூடு தான் அதிகமாகும்.

ஏசி இயங்க அதிக மின்சாரம் தேவைப்படும் என்பதால் மின்கட்டணம் எகிறுகிறது.நாள் முழுவதும் ஏசி இயங்கினாலும் கரண்ட் பில் வராமல் இருக்க சில ட்ரிக்ஸ் தெரிந்து வைத்துக் கொண்டாலே போதுமானது.

1)உங்கள் ஏசியின் ஏர் ஃபில்டரில் தூசி அலல்து அழுக்கு அடைத்து இருந்தால் அதை சுத்தப்படுத்த வேண்டும்.ஏர் ஃபில்டரில் தூசி அழுக்கு அடைந்திருந்தால் ரூம் குளிர்விக்க நீண்ட நேரமாகும்.இதனால் மின்சார கட்டணம் அதிகமாகும்.

2)உங்கள் வீட்டு ஜன்னல்களை ஸ்க்ரீன் கொண்டு மூடவும்.இதனால் வீட்டிற்குள் வெப்பம் வருவது தடுக்கப்படும்.ஏசி விரைவில் ரூமை குளுமையாக்கும்.இதனால் அதிக மின்சாரம் தேவைப்படாது.

3)உங்கள் வீட்டு ஜன்னல்கள்,கதவுகளில் விரிசல் இருந்தால் ஏசி காற்று வெளியில் செல்லும்.இதனால் அறையில் குளிர்ச்சி மிகவும் குறைவாக இருக்கிறது என்று கருதி நீண்ட நேரம் ஏசியை ஆனில் வைத்திவிடுவோம்.இதனால் கரண்ட் பில் எகிறி விடும்.எனவே வீட்டு ஜன்னல் மற்றும் கதவுகளில் விரிசல்,இடைவெளி இல்லமால் பார்த்துக் கொள்ளுங்கள்.

4)ஏசியை ஆனில் இருக்கும் பொழுது சீலிங் பேனை ஆன் செய்து விடவும்.இதனால் வீடு எளிதில் குளுமையடைந்து விடும்.

5)வருடத்திற்கு ஒருமுறை உங்கள் ஏசியை முறையாக பராமரிக்க வேண்டும்.இதனால் ஏசியில் இருக்கின்ற தூசி,அழுக்கு ஆகியவற்றை நீக்க முடியும்.