இது தெரிந்தால் இனி சீத்தா பழ கொட்டையை தூக்கி வீசமாட்டீங்க!! அதன் பலனை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!!

Photo of author

By Divya

அதிக சுவை மற்றும் வாசனை நிறைந்த சீத்தாப்பழம் அதிக சதைப்பற்று நிறைந்த ஒன்று.இது அனைத்து இடங்களிலும் மலிவு விலையில் கிடைக்க கூடிய பழமாகும்.இந்த பழத்தில் வைட்டமின் சி,ஆன்டி.ஆக்ஸிடன்ட்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.அது மட்டுமின்றி இரும்பு,மெக்னீசியம்,கால்சியம்,பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.

சீத்தாபழம் சாப்பிடுவதால் உடல் எடை குறையும்.ஆஸ்துமா,மூச்சுத் திணறல்,மாரடைப்பு,அஜீரணக் கோளாறு போன்றவற்றிற்கு சீத்தாபழம் சிறந்த தீர்வாக இருக்கின்றது.சர்க்கரை நோயாளிகளுக்கு சீத்தாபழம் உகந்த ஒன்று.இரத்த அழுத்த பாதிப்பு இருப்பவர்கள் சீத்தாபழம் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சீத்தா பழத்தில் நியாசின்,நார்ச்சத்து போன்றவை அதிகளவு நிறைந்திருப்பதால் இதை உட்கொள்ளும் போது கொலஸ்ட்ரால் அளவு குறையும்.இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் சீத்தா பழத்தை சாப்பிட்டால் பாதிப்பு குணமாகும்.இதில் இருக்கின்ற இரும்புச்சத்து இரத்த சோகையை குணமாக்க உதவுகிறது.

சீத்தா பழத்தை போன்றே அதன் விதைகளிலும் ஏகப்பட்ட நன்மைகள் அடங்கியிருக்கிறது.இந்த சீத்தா விதைகளை அரைத்து நீரில் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் பேன்,ஈறு தொல்லை நீங்கும்.

சீத்தாபழ விதையை நன்றாக காய வைத்து பொடித்து நீரில் கலந்து செடிகளுக்கு தெளித்தால் பூச்சி தாக்குதல் கட்டுப்படும்.அதேபோல் சீத்தாவிதைகளை பொடியாக்கி வீட்டில் தூவி விட்டால் எறும்பு,கரப்பான் பூச்சி,எலி,பல்லி போன்றவற்றின் தொல்லைகள் நீங்கும்.