இது தெரிந்தால் இனி ஸ்டிக்கர் ஒட்டிய பழங்களை வாங்கி சாப்பிட மாட்டீர்கள்!!

Photo of author

By Rupa

ஆரோக்கியமாக இருக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள்,பழங்களை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.குறிப்பாக பழங்கள் இனிப்பாகவும் சுவையாகவும் இருப்பதால் அனைவரும் விரும்பி உண்கின்றனர்.

ஆனால் இன்று அதிக லாபம் கிடைக்க வேண்டுமென்ற ஆசையில் சில வியாபாரிகள் பழங்களில் இரசாயனம் கலத்தல்,அழுகிய பழங்களை விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் வாங்கும் சில பழங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை கவனத்திருக்கிறீர்களா? அதற்கான உண்மை காரணம் என்ன என்பது பலருக்கும் தெரிவதில்லை.பழங்களின் ஒட்டப்பட்டிற்கும் ஸ்டிக்கருக்கும் நமது உடல் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு இருக்கிறது.குறிப்பாக ஆப்பிள்,ஆரஞ்சு போன்ற பழங்களில் தான் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.

ஸ்டிக்கரில் எத்தனை இலக்க எண்கள் இருக்கிறது என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.நீங்கள் வாங்கும் பழத்தில் நான்கு இலக்க எண் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் அது இரசாயனம் தெளித்த பழம் என்று அர்த்தம்.உதாரணத்திற்கு 7244 என்று நான்கு இலக்க எண் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பழங்களை வாங்கினால் நீரில் நன்கு சுத்தம் செய்த பிறகே சாப்பிட வேண்டும்.

மேலும் பழங்களில் ஐந்திலக்க எண்கள் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் அது மரபணு மாற்றப்பட்ட பழம் என்று அர்த்தம்.இந்த பழங்கள் சில உடல் உபாதைகளை ஏற்படுத்தக் கூடியவை.

அதேபோல் ஐந்து இலக்க எண் கொண்ட ஸ்டிக்கரில் 9 என்ற எண்ணுடன் ஆரம்பித்தால் அது இயற்கையாக விளைந்தவை என்று அர்த்தம்.இந்த பழம் சாப்பிட ஏதுவானவை.இது விலை அதிகம் உள்ள பழமாகும்.இந்த பழங்களை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.