வீட்டில் இந்த எண்ணையில் தீபம் போட்டால்.. எப்பேர்ப்பட்ட சொத்துப் பிரச்சனை நீங்கும்!!

Photo of author

By Divya

வீட்டில் இந்த எண்ணையில் தீபம் போட்டால்.. எப்பேர்ப்பட்ட சொத்துப் பிரச்சனை நீங்கும்!!

Divya

இன்றைய உலகத்தில் பணம்,சொத்து போன்றவற்றை தேவையான அளவு சேமித்து வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே எதிர்காலம் பிரச்சனை இல்லாத வகையில் அமைகிறது.சிலர் நகை,பணம்,சொத்து போன்றவற்றை அளவிற்கு அதிகமாக சேமித்தாலும் ஏதோ ஒரு காரணங்களால் அவை அவர்களின் கையை விட்டு நழுவி சென்றுவிடுகிறது.சிலருக்கு பல வருடங்களாக சொத்து சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றது.

எனவே சொத்து சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் விலகி இழந்த சொத்துக்களை மீட்டெடுக்க இந்த சொல்லப்பட்டுள்ள பரிகாரத்தை செய்யுங்கள்.

ஒரு கருநீல நிறத்தில் துணி ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் சிறிதளவு வெண்கடுகு சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை முடிந்து விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த விளக்கை தொடர்ந்து எட்டு சனிக்கிழமை நாளில் ஏற்றி வழிபட வேண்டும்.இப்படி செய்தால் சொத்து தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.சனிக்கிழமை நாளில் நல்லெண்ணெய் விளக்கு போடுவது போல் வெள்ளிக்கிழமை நாளில் இலுப்பை எண்ணையில் விளக்கு போட்டால் இழந்த சொத்துக்களை மீட்டெடுக்கலாம்.

வெள்ளிக்கிழமை நாளில் அதிகாலை நேரத்தில் எழுந்து குளிக்க வேண்டும்.பிறகு வீட்டு பூஜை அறைக்கு சென்று மண் விளக்கு வைத்து இலுப்பை எண்ணெய் ஊற்றி தாமரைத் தண்டு திரி போட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.வெள்ளிக்கிழமை நாளில் தொடங்கும் இந்த தீபம் ஏற்றும் முறையை தொடர்ந்து 48 தினங்கள் செய்து வந்தால் நினைத்த காரியங்கள் கைகூடும்.