Beauty Tips, Breaking News

மோரில் இந்த 2 பொருட்களை மிக்ஸ் செய்து முகத்தில் பூசினால் நீங்களும் ஹீரோயின் மாதிரி கலராகிடுவீங்க!!

Photo of author

By Divya

மோரில் இந்த 2 பொருட்களை மிக்ஸ் செய்து முகத்தில் பூசினால் நீங்களும் ஹீரோயின் மாதிரி கலராகிடுவீங்க!!

Divya

Button

மோரில் இந்த 2 பொருட்களை மிக்ஸ் செய்து முகத்தில் பூசினால் நீங்களும் ஹீரோயின் மாதிரி கலராகிடுவீங்க!!

பெண்கள் தங்களின் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள விரும்பவது இயல்பான ஒன்று தான்.ஆனால் சருமத்தின் நிறைந்த மாற்ற அழகை கூட்ட செயற்கை வழிகளை தேர்ந்தெடுத்தால் அவை நிச்சயம் பாதகமாகிவிடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

எனவே எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாக இயற்கை பொருட்களை கொண்டு சருமத்தின் நிறத்தை மாற்ற முயற்சித்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

தீர்வு 01:

1)மோர்
2)கடலை மாவு
3)கஸ்தூரி மஞ்சள் தூள்

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி கடலை மாவு மற்றும் 1/2 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பிறகு அதில் 3 தேக்கரண்டி மோர் சேர்த்து க்ரீம் பதத்திற்கு கலக்கி முகம் முழுவதும் அப்ளை செய்யவும்.30 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்யவும்.இவ்வாறு செய்வதன் மூலம் சருமத்தின் நிறம் மாறும்.

தீர்வு 02:

1)மோர்
2)ரோஜா இதழ் பவுடர்
3)முல்தானி மெட்டி

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி ரோஜா இதழ் பொடி,ஒரு தேக்கரண்டி முல்தானி மெட்டி பொடி சேர்த்து மிக்ஸ் செய்யவும்.பிறகு அதில் 4 தேக்கரண்டி மோர் சேர்த்து பேஸ்டாக்கி கொள்ளவும்.

இதை முகத்திற்கு அப்ளை செய்து வந்தால் சில வாரங்களில் சருமத்தின் நிறம் அதிகரித்து விடும்.

தீர்வு 03:

1)கடுக்காய் பொடி
2)மோர்
3)மஞ்சள் தூள்

கடுக்காய் பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.100 கிராம் அளவு வாங்கிக் கொள்ளவும்.பின்னர் ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி கடுக்காய் பொடி,ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு மோர் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.

இந்த பேஸ்டை முகம் முழுவதும் அப்ளை செய்து 30 நிமிடங்களுக்கு பின்னர் வாஷ் செய்து வந்தால் பொலிவிழந்த முகம்பளபளவென்று மின்னும்.முகத்திற்கு க்ரீம்,சோப் போன்ற கெமிக்கல் பொருட்களை தவிர்த்து மேலே கொடுக்கப்பட்டுள்ள பேஸ் பேக்கை பயன்படுத்தி வந்தால் நிச்சயம் சருமத்தின் நிறம் மாறும்.

மன நிம்மதி வேண்டுமா? “மயில் கொண்டை பூ பார்த்தால் விட்டுவிடாதீர்கள்” மருத்துவ குணம் கொண்ட மரம்..!!

வெள்ளி செவ்வாய் வீடு துடைத்தால் என்ன நடக்கும்? மறந்தும் இதை செய்யாதீர்கள்..!