எறும்பு மற்றும் ஈக்கள் இல்லாத வீடே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.இந்த சிறு பூச்சிகள் நமக்கு மிகப்பெரிய தொல்லையை கொடுக்கிறது.எனவே எறும்பு மற்றும் ஈக்களை விரட்டி அடிக்க இந்த டிப்ஸை முயற்சித்து பாருங்கள்.நிச்சயம் வீட்டில் ஒரு ஈ,எறும்பு நடமாட்டம் கூட இனி வீட்டில் இருக்காது.
தேவைப்படும் பொருட்கள்
1.சமையல் சோடா – ஒரு தேக்கரண்டி
2.வசம்பு பொடி – ஒரு தேக்கரண்டி
3.கல் உப்பு – ஒரு தேக்கரண்டி
4.பச்சை கற்பூரம் – ஒரு கட்டி
செய்முறை
முதலில் அகலமான வாலியில் முக்கால் பங்கு தண்ணீர் நிரப்பி கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சமையல் சோடா(பேக்கிங் சோடா) மற்றும் ஒரு தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு ஒரு கட்டி பச்சை கற்பூரம் மற்றும் ஒரு தேக்கரண்டி வசம்பு பொடியை அதில் சேர்த்து கலக்கவும்.பச்சை கற்பூரம் மற்றும் வசம்பு பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.தேவையான அளவு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.இந்த நீரை கொண்டு வீட்டை துடைத்தால் எறும்பு,ஈ தொல்லை இருக்காது.
தேவையான பொருட்கள்
1.வினிகர் – ஒரு தேக்கரண்டி
2.பேக்கிங் சோடா – ஒரு தேக்கரண்டி
3.எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
4.வசம்பு பொடி – ஒரு தேக்கரண்டி
செய்முறை
ஒரு பிளாஸ்டிக் பாக்கெட்டில் ஒரு தேக்கரண்டி வினிகர்,ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளவும்.பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை அதில் பிழிந்து கொள்ளவும்.
பிறகு அதில் ஒரு தேக்கரண்டி வசம்பு பொடி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.அதன் பிறகு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு கலந்து வாரத்திற்கு இருமுறை வீட்டை துடைத்தால் தரையில் ஈ,எறும்பு மற்றும் பூச்சிகள் ஏற்படாமல் இருக்கும்.