இந்த ஒரு பொருளை தண்ணீர் கலந்து வீடு துடைத்தால்.. தரை பளிச்சிடும்!! ட்ரை செய்து பாருங்கள்!!

Photo of author

By Rupa

வீடு துடைப்பது என்பது பெண்களுக்கு பெரும் சவாலான வேலையாக இருக்கிறது.குறிப்பாக பண்டிகை காலங்களில் வீட்டை சுத்தம் செய்து முடிப்பதற்குள் ஒருவழியாகி விடுவார்கள்.சிலர் வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை வீடு துடைப்பார்கள்.சிலர் பண்டிகை காலங்களில் மட்டும் வீட்டை சுத்தம் செய்வார்கள்.

ஆனால் குழந்தைகள் உள்ள வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.தரையில் லட்சக்கணக்கான அழுக்கு,கிருமிகள் படிந்திருக்கும்.இதனால் வீட்டு தரையை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.இல்லையென்றால் கடுமையான நோய்வாய்ப்பட வேண்டியிருக்கும்.

வீட்டு தரையை சுத்தம் செய்ய இரசாயனம் கலந்த லிக்விட் பயன்படுத்தாமல் வீட்டில் இருக்கின்ற பொருட்களை மட்டும் பயன்படுத்துங்கள் போதும்.

1)வெள்ளை வினிகர்

ஒரு பாக்கெட்டில் தண்ணீர் நிரப்பி வெள்ளை வினிகர் ஒரு மூடி ஊற்றி கலந்து விடவும்.பிறகு மாப்பை அதில் நினைத்து தரையை சுத்தம் செய்யவும்.வெள்ளை வினிகர் அழுக்கு,எண்ணெய் பிசுக்கை போக்க உதவுகிறது.

2)சமையல் சோடா

அரை வாளியில் தண்ணீரில் 25 கிராம் சமையல் சோடா சேர்த்து கலந்து விடவும்.பிறகு மாப்பை அதில் நினைத்து தரையை சுத்தம் செய்யவும்.சமையல் சோடாவது தரையில் உள்ள அழுக்களை போக்கி பளபளப்பாக வைக்க உதவுகிறது.

3)டிஷ் வாஷர் சோப் மற்றும் வினிகர்

ஒரு பாக்கெட்டில் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி இரண்டு தேக்கரண்டி டிஷ் வாஷர் மற்றும் ஒரு தேக்கரண்டி வினிகர் சேர்க்கவும்.பிறகு அதில் முக்கால் பாகம் தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.இதை கொண்டு வீடு துடைத்தால் தரையில் உள்ள அழுக்குகள் அனைத்தும் முழுமையாக நீங்கிவிடும்.