தேங்காய் எண்ணையில் இதை கலந்து தேய்த்தால்.. பேன் பொடுகு அடியோடு நீங்கும்!!

Photo of author

By Divya

தேங்காய் எண்ணையில் இதை கலந்து தேய்த்தால்.. பேன் பொடுகு அடியோடு நீங்கும்!!

Divya

குழந்தைகள்,பெரியவர்கள் அனைவரும் பேன்,பொடுகு பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.இதில் இருந்து விடுதலை கிடைக்க இங்கு தரப்பட்டுள்ள டிப்ஸ் கைகொடுக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய் – அரை லிட்டர்
2)வெற்றிலை – இரண்டு
3)புதினா இலை – பத்து
4)பூண்டு பற்கள் – ஐந்து
5)வேப்பிலை – இரண்டு கொத்து
6)வெந்தயம் – அரை தேக்கரண்டி
7)வேப்பம் பூ – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்ற வேண்டும்.அடுத்து இரண்டு வேப்பிலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு பத்து புதினா இலைகளை அதில் சேர்க்க வேண்டும்.அடுத்து ஐந்து பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு தேங்காய் எண்ணையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து இரண்டு கொத்து வேப்பிலை,இரண்டு தேக்கரண்டி வேப்பம் பூ ஆகியவற்றை தேங்காய் எண்ணையில் போட வேண்டும்.

அடுத்து அரை தேக்கரண்டி வெந்தயத்தை தேங்காய் எண்ணையில் போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.அதன் பிறகு இந்த எண்ணையை ஆறவைக்க வேண்டும்.இதனை ஒரு சுத்தமான பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.

இந்த எண்ணையை தலைக்கு தடவி வந்தால் பேன் தொல்லை முழுமையாக ஒழியும்.பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் இந்த எண்ணையை தேய்ப்பதன் மூலம் உரிய பலனை காணலாம்.

தேங்காய் எண்ணையில் வேப்பிலை,வேப்பம் பட்டையை ஊறவைத்து தலைக்கு அப்ளை செய்து வந்தால் பேன் தொல்லை நீங்கும்.எலுமிச்சையை தலைக்கு தேய்த்து குளித்தால் பேன்,பொடுகு பாதிப்பு குணமாகும்.

வேப்ப எண்ணையில் பூண்டு பற்களை போட்டு வதக்க வேண்டும்.பிறகு இந்த எண்ணையை ஆறவைத்து தலைக்கு தடவினால் பேன் தொல்லை அடியோடு ஒழியும்.