கவர் வேண்டும் என்றால் இதையும் சேர்த்து அனுப்புவோம்! அந்த நிறுவனத்தால் அதிர்ந்து போன வாடிக்கையாளர்!

0
153
If you need a cover we will send this along! The customer who was shocked by that company!
If you need a cover we will send this along! The customer who was shocked by that company!

கவர் வேண்டும் என்றால் இதையும் சேர்த்து அனுப்புவோம்! அந்த நிறுவனத்தால் அதிர்ந்து போன வாடிக்கையாளர்!

கேரள மாநிலத்தில் வயநாடு மாவட்டம் கனியம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மிதுன் பாபு. இவர் ஒரு பாஸ்போர்ட் வைத்துள்ளார். அதற்கு கவர்  வாங்க வேண்டும் என்று நினைத்து, அவர் ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசான் மூலம் அதைப் வாங்க பதிவு செய்துள்ளார். தற்போதெல்லாம் நமக்கு வசதியாக வேண்டுமென்று இப்படியான பல நிறுவனங்கள் பல முளைத்துள்ளன.

பிளிப்கார்ட், அமேசான் போன்ற பல நிறுவனங்கள், மற்றும் சொமேட்டோ போன்ற உணவு தரும் நிறுவனங்களும் ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். அதன் மூலமும் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தற்போதெல்லாம் சிலருக்கு அவர்களது பொருட்கள் வீட்டில் இருந்தே வாங்கி கொள்கின்றனர்.

அந்த பொருட்களும் சரியான விதத்தில் வீட்டுக்கே வந்து சேர்ந்து விடுகின்றது. ஆனால் மிகப் பலருக்கு இவ்வாறான தவறுகள் நடந்தேறி வருகின்றன. அவர் ஆர்டர் செய்த பாஸ்போர்ட் கவர் அந்த அமேசான் நிறுவனத்தில் இருந்து நவம்பர் 1ஆம் தேதி மிதுனுக்கு வந்து சேர்ந்தது.

தான் ஆர்டர்  செய்த கவர் வந்துள்ளது என்ற ஆர்வத்தில், அவர் அதைப் பிரித்துப் பார்த்தார். ஆனால் பிரிந்து அவருக்கு பயங்கரமான அதிர்ச்சி காத்து இருந்தது. ஏனென்றால், அந்த நிறுவனத்தில் இருந்து வந்த கவரில் அவர் ஆர்டர் செய்த கவருக்கு பதில் அதனுடன் உண்மையான பாஸ்போர்ட்டும் இருந்துள்ளது.

அதுவும் இந்திய அரசால் விநியோகிக்கப்படும் பாஸ்போர்ட். அது எப்படி அமேசானில் வந்திருக்க முடியும் என்பது தெரியாமல், குழப்பம் அடைந்த அவர் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் அந்த நிறுவனத்தில் இருந்து எந்த ஒரு நபரும் அவருக்கு சரியான பதில் அளிக்கவில்லை.

அதனை தொடர்ந்து அந்த பாஸ்போர்ட்டை அவர் ஆய்வு செய்யத் தொடங்கினார். அப்போது அது திருச்சூரை சேர்ந்த முகமது சலீம் என்பவர் உடையது என்பதை கண்டறிந்தார். மேலும் அவர் அந்த பாஸ்போர்ட்டில் இருந்த முகவரிக்கு தொடர்பு கொண்டு இது குறித்து பேசியுள்ளார்.

அப்போதுதான் அங்கு என்ன நடந்தது என்பது அவருக்கு தெரிந்துள்ளது. முகம்மது சலீமும் இதேபோல் ஒரு பாஸ்போர்ட் கவர் புக் செய்துள்ளார். அதில் அவர் தனது பாஸ்போர்ட் வைத்துள்ளார். ஆனால், அது பிடிக்கவில்லை என்பதன் காரணமாக அதைத் திருப்பி அனுப்பி உள்ளார்.

ஆனால் அதில் வைத்த அவரது பாஸ்போர்ட்டை எடுக்காமலேயே அதை திருப்பி அனுப்பி வைத்துள்ளார். அந்த நிறுவனமும் அந்த கவரை மறு பரிசோதனை செய்யாமலேயே வேறு ஒரு நபர் கேட்டதும் அதை அப்படியே அனுப்பி உள்ளது என்பதும், இதன் மூலம் நன்கு தெரிய வந்தது.

அதன் காரணமாக சலீமின் உண்மையான பாஸ்போர்ட் தற்போது ஆர்டர் செய்த நிறுவனத்திடம் கவனக்குறைவாக சென்றுள்ளது. நாம் அனைத்தையும் உண்மையாக இருக்கும் என நம்புகிறோம். ஆனால் அதன் உண்மைத் தன்மைக்கு நாம் எவ்வாறு உத்தரவாதம் தர முடியும்.

Previous articleகடந்த இரண்டு நாட்களில் மட்டும் 24 பேர் பலி! காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்!
Next articleஅவர்களுக்கு என்ன உரிமை உள்ளது? அதிமுகவினரை கேள்வி எழுப்பிய அமைச்சர்!