ரூ 1000 கொடுத்தால் 5 லட்சம் கிடைக்கும் சூப்பர் திட்டம்!! உடனே இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!
மத்திய அரசு,நாட்டிலுள்ள பெண் குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி சுகன்யா சம்ரிதி யோஜனா அதாவது செல்வமகள் சேமிப்பு என்ற திட்டத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு துவக்கி வைத்தது.இது பெண்குழந்தைகளின் மேம்பாட்டிற்கான ஒரு சிறப்பான சேமிப்பு திட்டமாகும்.
செல்வமகள் சேமிப்பு திட்டம்
10 வயதிற்குள் கீழ் உள்ள குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் இந்த திட்டத்தில் சேமிப்பு கணக்கை தொடங்கலாம்.இந்த திட்டத்தில் ரூ.1000 செலுத்தி கணக்கு தொடங்க வேண்டும்.
மாதம் ஒருமுறை சேமிப்பு கணக்கில் பணம் செலுத்தலாம்.முடியாதவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை குறைந்தபட்சம் ரூ.1,000 செலுத்திட வேண்டும்.இத்திட்டத்தில் மொத்தம் 14 ஆண்டுகள் வரை பணம் வேண்டும்.பெண்ணுக்கு 21 வயது பூர்த்தியான பின்னரே சேமிப்பு தொகை + வட்டியை பெற முடியும்.இத்திட்டத்திற்கு தற்பொழுது 8% வட்டி வழங்கப்படுகிறது.நீங்கள் சேமிப்பு கணக்கு தொடங்கும் பொழுது என்ன வட்டி இருந்ததோ அவை தான் சேமிப்பு காலம் நிறைவடையும் வரை இருக்கும்.மத்திய அரசு வட்டியை ஏறினாலும்,குறைத்தாலும் உங்கள் சேமிப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
இத்திட்டத்தில் ஓர் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 மற்றும் அதிகபட்சம் ரூ.1,50,000 வரை செலுத்த முடியும்.உங்கள் 5 வயதில் உங்கள் பெண் குழந்தையில் பெயரில் கணக்கை தொடங்கி மாதம் ரூ.1000 செலுத்தி வருகிறீர்கள் என்றால் முதிர்வுத் தொகையாக ரூ.5,54,206 கிடைக்கும்.
ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரு பெண் பிள்ளைகளுக்கு இந்த செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்கு முடியும்.இந்திய குடியுரிமை உள்ள குழந்தைகள் மட்டுமே இந்த திட்டத்தில் கணக்கு தொடங்க முடியும்.
செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்க தேவைப்படும் ஆவணங்கள்:
1)பிறப்பு சான்றிதழ்
2)பெற்றோர் மற்றும் குழந்தை ஆதார் கார்டு
3)பான் கார்டு
4)பாஸ்போர்ட் சைஸ் போட்டோ