ரூ.7 செலுத்தினால் மாதம் ரூ.10000 பென்ஷன் கிடைக்கும்.. இந்த திட்டம் பற்றி தெரியுமா?
நம் இந்தியாவில் வாழும் ஏழை,எளிய மக்களுக்காக மத்திய அரசு பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.மருத்துவம்,சுய தொழில்,இலவச கேஸ் இணைப்பு உள்ளிட்ட திட்டங்களின் வரிசையில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தாலும் நாட்டு மக்கள் பலனடைந்து வருகின்றனர்.
அடல் பென்ஷன் யோஜனா:
இது ஓய்வு காலத்தில் நம் வாழ்க்கையை சிரமின்றி வாழ வழிவகை செய்கிறது.இந்த திட்டத்தில் தாங்கள் செலுத்த கூடிய தொகை சிறிது.ஆனால் அவை தங்களுக்கு இரட்டிப்பு லாபத்தை கொடுக்கும்.
அடல் பென்ஷன் யோஜனா பென்ஷன் திட்டத்தில் சேர்ந்த பயனர் தங்களின் 60 வயதிற்கு பின்னரே இந்த திட்டத்தின் பலனை அனுபவிக்க முடியும்.
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்திற்கான தகுதி:
1)இந்திய குடிமனாக இருத்தல் வேண்டும்.
2)18 வயதை பூர்த்தியடைந்த இந்தியர்கள் இந்த திட்டத்தில் இணைய தகுதியானவர்கள்.
3)40 வயது வரை உள்ள ஆண்,பெண் அனைவரும் இந்த திட்டத்தில் சேரலாம்.
இந்த திட்டத்தில் சேர்ந்த பின்னர் நாள் ஒன்றுக்கு ரூ.7 அல்லது மாதம் ரூ.210 தங்கள் அடல் பென்ஷன் யோஜனா கணக்கில் முதலீடு செய்ய வேண்டும்.2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் இதுவரை 5 கோடிக்கும் அதிகமானோர் பயனர்களாக தங்களை இணைத்துள்ளனர்.
அடல் பென்ஷன் யோஜனா திட்ட பயனர்கள் தங்களுக்கு 60 வயது பூர்த்தியடையாமல் பென்ஷன் பெற முடியாது.இந்த திட்டத்தில் சேர்ந்த பயனர் இறந்து விட்டால் அவரது வாழ்க்கை துணைக்கு பென்ஷன் தொகை கிடைக்கும்.இருவருமே இறந்து விட்டால் அந்த பென்ஷன் அவர்கள் குறிப்பிட்டுள்ள நாமினிக்கு வழங்கப்படும்.
ஓய்வு காலத்தில் ரூ.1,000,2,000,3,000,ரூ.4,000,ரூ.5,000,ரூ.10,000 வரை பென்ஷன் பெற திட்டத்தில் சேர்ந்து அதற்கேற்றவாறு முதலீடு செய்ய வேண்டும்.
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேர தேவைப்படும் ஆவணங்கள்:
*தாங்கள் எந்த வங்கியில் கணக்கு தொடங்கி இருக்கிறீர்களோ அந்த வங்கி பாஸ் புக்
*ஆதார் நகல்
*ஓட்டர் ஐடி
*ரேசன் கார்டு
நீங்கள் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு உங்கள் அடல் பென்ஷன் யோஜனா கணக்கை மாற்றிக் கொள்ள முடியும்.இந்த திட்டம் நம் ஓய்வு காலத்தில் நமக்கு மிகவும் பயன்படக் கூடியவை என்பதால் ஏழை மக்கள் இந்த திட்டத்தை தொடங்குவது நல்லது.