பேனா நினைவு சின்னம் வைத்தால் அதை உடைப்பேன்! சமாதியை காலி செய்து விடுவேன் – சீமான் மீண்டும் ஆவேசம்

Photo of author

By Savitha

பேனா நினைவு சின்னம் வைத்தால் அதை உடைப்பேன்! சமாதியை காலி செய்து விடுவேன் – சீமான் மீண்டும் ஆவேசம்

மீண்டும் சொல்கிறேன் பேனா நினைவு சின்னம் வைத்தால் உடைப்பேன் எனவும்
இரவோடு இரவாக கிணற்றை காணவில்லை என்று வடிவேல் கூறியது போல சமாதியை காலி செய்து விடுவேன் எனவும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

60 வது தேசிய கடல்சார் தினத்தையொட்டி இந்திய கடலோடிகள் நல அமைப்பு சார்பில் சென்னை துறைமுகத்தில் உள்ள கப்பல் சிப்பந்திகள் விடுதியில் நடைபெற்ற கருத்தரங்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மேடையில் பேசிய சீமான், சுற்றுச்சூழலியல் எனும் வார்த்தையை நாம் அடிக்கடி கேட்கிறோம், பூமி என்பது தாயின் மடி போன்றது. இந்த நிலத்தில் வணங்கும் சாமியை காப்பாற்ற நூற்றுக்கணக்கான கட்சிகள், இயக்கங்கள் இருக்கிறது , ஆனால் வாழும் பூமியை காப்பாற்ற நாம் தமிழர் கட்சியை தவிற வேறு எந்த கட்சியும் இல்லை.

இயற்கையாய் வளரும் மரங்களில் மட்டுமே பறவைகள் கூடு கட்டும், ஆனால் இப்போது சென்னையில் இருக்கும் மரங்கள் ஒன்றிலும் பறவைகள் கூடு கட்டாது கடலை குப்பைகூடாக மனிதன் மாற்றி விட்டான். ஓட்டுக்காக சுற்றுச்சுழல் பற்றி நான் பேசவில்லை, பிறந்து வாழ்ந்த நாட்டுக்காக பேசுகிறேன்.

மலைகளில் இருக்கும் காடுகளை நட்டது காக்கைகளும், பறவைகளும், பூச்சிகளும் மட்டுமே, பறவைகள் பூச்சிகள் அழியட்டும் என அலட்சியமாக இருந்தால் அனைத்தும் போய்விடும். எதிர்கால சந்ததியினருக்கு ஏதாவது விட்டு வைத்து செல்வோம்.

மிக்சி, கிரைண்டர் , தொலைகாட்சி, லேப்டாப் என இலவசமாய் அளிக்கின்ற அரசு ஏன் தன்னீரை இலவசமாய் அளிக்கவில்லை என கேள்வி எழுப்பிய சீமான் . தண்ணீரை இலவசமாக அளித்தால் கமிஷன் கிடைக்காமல் போய்விடும்.

குண்டு போட்டு கொல்வது மட்டுமே குற்றம் அல்ல, குடிக்க வைத்து கொல்வதும் குற்றம் தான். இப்போதும் சொல்கிறேன் பேனா நினைவு சின்னத்தை வைத்தால் உடைப்பேன். வரலாற்றின் கால சக்கரம் சுழன்று கொண்டே தான் இருக்கும் கீழே இருப்பவன் மேலே வருவான் மேலே இருப்பவன் கீழே வருவான். அந்த நேரத்தில் ஒட்டுமொத்தமா எல்லாருக்கும் சிறப்பு முகாம் தான்.

கடல் கடலாக இருக்க வேண்டும் குப்பைமேடாக இருக்கக் கூடாது. பள்ளிக்கரணை சதுப்பு நில ஏரியை குப்பை மேடாக மாற்றியதால் அவர்களை கடற்கரைக்கு பதில் இங்கே புதைந்திருக்க வேண்டும்.

மெரினாவில் முன்னாள் முதலமைச்சர்கள் நான்கு பேருக்கும் தலா 2 ஏக்கர் பரப்பளவில் சமாதி அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நாள் இரவோடு இரவாக சமாதியை கிணற்றை காணவில்லை என்று வடிவேல் கூறியது போல இரவோடு இரவாக சமாதியை காலி செய்து விடுவேன்.

என் கட்சியை ஒரு சூழலியல் கட்சி தான் எனவும் என் பேச்சை கேட்க யாரும் இல்லை என்றாலும் சுவரைப் பார்த்து பேசுவேன்.

மேலும் சொந்தமாக விமானம் இல்லாத நாட்டுக்கு எதற்கு 5000 ஏக்கர்களில் விமான நிலையம் எனக் கேள்வி எழுப்பிய அவர்.. இங்கு clean India உள்ளது ஆனால் green India இல்லை எனத் தெரிவித்தார்.