இந்த ஒரு பொருளை தண்ணீரில் போட்டு குடித்து வந்தால்.. ஒரே மாதத்தில் 10 கிலோ வரை உடல் எடை குறையும்!!

Photo of author

By Divya

 

இன்றைய வாழ்க்கை முறை முற்றிலும் ஆரோக்கியமற்றதாக மாறிவருவதால் உடலில் நோய் பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.அதிக கொழுப்பு,எண்ணெய் நிறைந்த உணவுகளை உண்ண மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

 

உணவு உட்கொள்ளும் நேரத்தை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டு வரும் மக்கள் உடல் ஆரோக்கியம் பற்றிய போதிய விழிப்புணர்வு இன்றி உள்ளனர்.இன்று பலர் உடல் பருமன் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியம் இல்லாத உணவுகள் தான்.ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து உடல் எடை கூடிவிடும்.இதனால் இதய நோய்,மாரடைப்பு,இரத்த அழுத்தம்,உடல் மந்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

 

எனவே ஆரம்ப நிலையிலேயே உடல் எடையை குறைத்து கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்,நடைபயிற்சி செய்தல் போன்றவைகள் மூலம் உடல் எடையை எளிதில் குறைத்துவிட முடியும்.

 

அதேபோல் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகத்தை நீரை ஊறவைத்து குடித்து வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.செரிமானப் பிரச்சனையை போக்கும் சீரகத்தை நீரில் ஊறவைத்து குடிப்பதால் உடல் எடை கட்டுப்படும்.மருத்துவ குணங்கள் நிறைந்த சீரகத்தை உட்கொண்டு வந்தால் உடலில் பல வியாதிகள் குணமாகும்.

இரவில் ஒரு தேக்கரண்டி சீரகத்தை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவிடவும்.மறுநாள் இந்த நீரை வடிகட்டி குடித்து வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் கரைந்து உடல் எடை குறையும்.