இந்த ஒரு சொல்லை 3 முறை சொன்னால்.. எப்பேர்ப்பட்ட கண்திருஷ்டியும் ஒழிந்து போய்விடும்!!

Photo of author

By Divya

இந்த ஒரு சொல்லை 3 முறை சொன்னால்.. எப்பேர்ப்பட்ட கண்திருஷ்டியும் ஒழிந்து போய்விடும்!!

Divya

கல்லடி பட்டாலும் கண்ணாடி படக்கூடாது என்பது பழமொழி.நம் மீது கண்திருஷ்டி பட்டுவிட்டால் எந்த காரியமும் கைகூடாமல் போய்விடும்.அடிக்கடி உடல்நலப் பிரச்சனை ஏற்படும்.வீட்டில் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளும் நடைபெறாது.

வீட்டில் கெட்ட செயல்கள் அதிகமாக நடைபெறும்.கண்திருஷ்டி பட்டால் பணக் கஷ்டம் வந்து கொண்டே இருக்கும்.குடும்ப நபர்களுக்குள் கருத்து வேறுபாடு,வெறுப்பு உணர்வு,சண்டை சச்சரவு போன்றவை அடிக்கடி வந்து கொண்டே இருக்கும்.வீட்டில் நிம்மதி என்பது இல்லாமல் போகும்.இவையெல்லாம் கண் திருஷ்டியால் ஏற்படுகிறது.

பொறாமை குணம் கொண்ட கெட்ட மனிதர்கள் இதுபோன்ற இழிவான செயல்களில் ஈடுபடுகின்றனர்.இந்த மனிதர்களின் தீய செயல்கள் நம்மை பாதிக்காமல் இருக்க சில விஷயங்களை நாம் நிச்சயம் பின்பற்ற வேண்டும்.

கண்திருஷ்டியை ஒழித்து கட்டும் பவர்புல் பரிகாரம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.இதற்கு தேவைப்படும் பொருட்கள் பூண்டு,கல் உப்பு மற்றும் ஜிப்லாக் கவரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பல் பூண்டு எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு பேனா எடுத்து பூண்டு மீது ஒரு கண் படத்தை வரைய வேண்டும்.பிறகு ஜிப்லாக் கவரில் சிறிதளவு உப்பு போட்டுக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு கண் படம் வரையப்பட்ட பூண்டை அதில் போட்டு சிப் ஜிப்லாக் செய்ய வேண்டும்.பிறகு இதை தலையணைக்கு அடியில் வைத்துவிட வேண்டும்.அடுத்து தூங்கச் செல்வதற்கு முன்னர் “I Release”என்ற வார்த்தையை மூன்று முறை உச்சரிக்க வேண்டும்.

அதன் பிறகு தூங்க வேண்டும்.இந்த கவர் மூண்டு தினங்களுக்கு உங்கள் தலையணைக்கு அடியில் இருக்க வேண்டும்.அதன் பிறகு இதை கால் படாத இடத்தில் தூக்கி வீசிவிட வேண்டும்.இந்த ஒரு எளிய பரிகாரம் செய்வதன் மூலம் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியையும் ஒழித்துக் கட்ட முடியும்.

கண்திருஷ்டியால் எந்தஒரு கெட்ட தருணங்களையும் சந்திக்காமல் இருக்க இந்த பூண்டு பரிகாரத்தை அனைவரும் செய்யலாம்.