உங்க வீட்டில் உள்ள குக்கரை பார்த்தால் அமமுக சின்னம் நியாபகம் வர வேண்டும்!! டிடிவி தினகரன் மனைவி பிரச்சாரம்!!
டிடிவி தினகரன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த டிடிவி தினகரன் அவர்களுடைய மனைவி அனுராதா அவர்கள் மக்களிடையே பேசும் பொழுது உங்கள் வீட்டில் உள்ள குக்கரை பார்க்கும் பொழுது அமமுக கட்சியின் குக்கர் சின்னம் தான் நியாபகத்திற்கு வரவேண்டும் என்று பேசினார்.
வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள முதல் கட்ட மக்களவை தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரன் அவர்கள் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் டிடிவி தினகரன் அவர்களை ஆதரித்து அவருடைய மனைவி அனுராதா அவர்கள் சின்னமனூர் அருகே உள்ள மேல்மணலாறு, மேகமலை, ஹைவேஸ் பகுதியில் உள்ள மலைகிராமப் பகுதிகள் ஆகிய இடங்களில் நேற்று(ஏப்ரல்16) பிரச்சாரம் செய்தார்.
அப்பொழுது மக்களிடையே பேசிய டிடிவி தினகரன் அவர்களின் மனைவி அனுராதா அவர்கள் “கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கழிந்து வந்துள்ளோம். இருப்பினும் என்னுடைய கணவர் மீது நீங்கள் வைத்துள்ள பாசம் இன்னும் மாறாமல் அப்படியே இருக்கின்றது. இதைப் பார்க்கும் பொழுது எனக்கு நெகிழ்ச்சியாக இருக்கின்றது.
ஆர்.கே நகர் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் என் கணவர் பெரிய கட்சிகளை எதிர்த்து போட்டியிட்டார். அப்பொழுது அவர் போட்டியிட்ட சின்னம் தான் குக்கர். ஆர்.கே நகர் பகுதியில் உள்ள மக்கள் ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் உள்ள குக்கர் சின்னத்தில் வாக்களித்து வாக்களித்து அந்த பட்டனை அழுத்தி அழுத்தியே தேயும் நிலை ஏற்பட்டது. ஆர்.கே நடைபெற்றது போலவே தேனியிலும் ஈன் கணவர் டிடிவி தினகரன் அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.
முன்பு என்னுடைய கணவர் இந்த தொகுதியில் எம்பியாக இருந்த பொழுதே இந்த தகுதிக்கு பல நலத்திட்டங்களை செய்துள்ளார். சமுதாயக்கூடம், கோயில் மண்டபம் என்று பல்வேறு காலகட்டங்களில் என்னுடைய கணவரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதை காண முடியும்.
தற்பொழுது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் டிடிவி தினகரன் அவர்கள் மீண்டும் வெற்றி பெற்று எம்.பி ஆனால் தேனி தொகுதிக்கு மேலும் பல நலத்திட்டங்களை செய்வார். நீங்கள் குக்கர். சின்னத்திற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தேனி தொகுதியின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்து தரும்” என்று அவர் கூறினார்.
பின்னர் சின்னமனூரை தொடர்ந்து பொட்டிபுரம், ஆண்டிப்பட்டி, ராமகிருஷ்ணபுரம், புதுக்கோட்டை, திம்மிநாயக்கன்பட்டி, ஏரணம்பட்டி, கோணம்பட்டி ஆகிய பகுதிகளில் டிடிவி தினகரன் அவர்களின் குக்கர் சின்னத்துக்கு வாக்கு கேட்டு அனுராதா அவர்கள் பிரச்சாரம் செய்தார்.