வீட்டு முன்னாடி வண்டியை நிறுத்தினால்!! இனி காசு வாங்கலாம்!!
இன்றைய காலகட்டத்தில் அதிக அளவில் வாகனங்கள் பேருந்துகள் கார்கள் போன்றவற்றியே பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் அதனை நிறுத்துவதற்கு என்று சில பார்க்கின் பகுதி உள்ளது.
அதாவது நீங்கள் உங்கள் தேவைகளுக்காக செல்லும் பகுதிகளான மருத்துவமனை,தியேட்டர், பார்க், கடைகள், கல்லூரிகள் போன்ற பல பகுதிகளுக்கு நீங்கள் உங்கள் வாகனத்தை பயன்படுத்தி செல்கின்றீர்கள். அதன்பின்பு அந்த வாகனத்தை அதற்கென்று கொடுக்கப்பட்ட பார்க்கின் பகுதியில் நிறுத்துகின்றீர்கள்.
சிலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இவ்வாறு பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் அல்லது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் போது அந்த வாகனத்தின் மீதும் அதன் ஓட்டுனரின் மீதும் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இதிலும் சிலர் பார்க்கிங்காக பணம் கொடுக்க வேண்டும் என்பதால் சட்ட விரோதமாக நமது வீடுகளுக்கு முன்பு நம் அன்றாட வாழ்விற்கு தொந்தரவு தரும் வகையில் வாகனங்களை நிறுத்தி செல்கிறார்கள்.
இவ்வாறு வீட்டிற்கு முன் வாகனத்தை நிறுத்துவது ஏன் தவறு என்றால், பொது இடம் எனக் கூறப்படுவதில் நமது வீட்டு வாசலும் அதில் அடங்கும் நம் வீட்டு வாசலில் வாகனத்தை நிறுத்தினாலே தவறு என்ற பட்சத்தில் நமக்கு இடையூறாக வேறொருவர் வாகனம் நிறுத்தி இருந்தால் அது சட்டப்படி குற்றமாகும்.
இவ்வாறு வீட்டு வாசல் மட்டுமல்ல எந்த ஒரு பொது இடங்களில் வண்டியை நிறுத்தி அது பொது மக்களுக்கு தொந்தரவாக அமையும் வகையில் இருந்தால் IPC section 268- public nuisance தவறு.
இதுவே நிறுத்திய அந்த வாகனத்தால் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் இருந்தால் IPC section 283- danger in public way சட்டப்படி குற்றமாகும்.
இதனைத் தொடர்ந்து வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்தால் வீட்டின் உரிமையாளர் உள்ளேயும் அல்லது வெளியையும் செல்ல முடியாமல் அவதிப்பட்டால் அது IPC section 383- wrongful restraint சட்டத்தின் படி குற்றமாகும்.
இதன் மூலம் அபராதம் செலுத்துவதோடு சிறை தண்டனையும் கிடைக்கும்.
இது மட்டுமல்லாமல் பார்க்கிங் செய்வதற்கு தடை விதிக்கப்பட்ட பகுதியில் வாகனத்தை நிறுத்தி பத்து மணி நேரம் வரை அந்த வாகனம் எடுக்கப்படவில்லை என்றால் motor vehicle act section 127 படி போக்குவரத்து காவல்துறையினர் அந்த வாகனத்தை எடுத்து செல்வதோடு அது எடுத்துச் செல்வதற்கான பணத்தையும் மற்றும் தடை விதிக்கப்பட்ட பகுதியில் வண்டியை நிறுத்தியதற்கான அபராதத்தையும் செலுத்த வேண்டும்.
இவ்வாறு வீட்டிற்கு முன்பு வாகனத்தை நிறுத்தினால் அபராதம் செலுத்த வேண்டும் இந்த அபராதத்தை நாம் பெற முடியாது அரசாங்கத்திடம் தான் கொடுக்க வேண்டும்.
இதன் குறித்து சென்னை கோயம்புத்தூர் போன்ற மாநகராட்சிகளில் பார்க்கிங் பாலிசி இந்த வசதியை கொண்டு வர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.