இப்படி தலைமுடியை பராமரித்தால்.. ஒரு முடி கூட உதிராது!! இன்றே முயற்சி செய்யுங்கள்!!

Photo of author

By Divya

ஆண்,பெண் அனைவரின் அழகு மற்றும் வயதை தலைமுடி தான் நிர்ணயிக்கிறது.உங்களது தலை முடி அடர்த்தியாகவும்.கருமையாகவும் இருந்தால் உங்கள் வயதை குறைத்துக் காட்டும்.இளம் வயதில் நரைமுடி பிரச்சனை இருந்தால் அது உங்களை வயதானவர்கள் போல் காட்டிவிடும்.

அது மட்டுமின்றி முடி உதிர்தல் பிரச்சனை அதிகமாக இருந்தால் அது இளம் வயதில் வழுக்கையை உண்டாக்கி வயதான தோற்றத்தை கொடுத்துவிடும்.

பெண்களுக்கு இருக்கும் பழக்கங்களில் ஒன்று முடியை இறுக்கி கட்டுதல்.பெரும்பாலான இந்திய பெண்கள் முடியை இறுக்கி கட்டிக் கொள்கின்றனர்.இதனால் உச்சந்தலையில் உள்ள முடிகள் வேருடன் உடைந்து விடுகிறது.

தலைமுடிக்கு அழுத்தம் கொடுக்காமல் அதை மென்மையாக கையாண்டால் தலைமுடி உதிர்வு ஏற்படுவது கட்டுப்படும்.அதிக மன அழுத்தம் ஏற்பட்டாலும் முடி உதிர்வு பிரச்சனை அதிகரிக்கும்.எனவே மன அழுத்தம் ஏற்பட்டால் அதிலிருந்து எளிதில் மீள்வது நல்லது.

தலைக்கு ஷாம்பு,சீகைக்காய் பொடி,மூலிகை பொடி என்று எதை பயன்படுத்தினாலும் அதை மாற்றாமல் இருப்பது நல்லது.அடிக்கடி ஷாம்பு மாற்றப்பட்டால் முடி உதிர்வு அதிகரிக்கும்.அதேபோல் நரை முடியை மறைக்க கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

அவுரி,மருதாணி போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி தலை முடியை கருமையாக்க முயலுங்கள்.கெமிக்கல் ஹேர் டை ம்,முடியின் அடர்த்தியை குறைத்துவிடும்.

தலைமுடியை இறுக்கி காட்டாமல் பின்னி போட்டால் முடி உதிர்வு ஏற்படுவது கட்டுப்படும்.தலை முடி வெடிப்பு ஏற்பட்டால் அவ்விடத்தில் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்ய வேண்டும்.இதனால் வெடிப்பு நீங்கி முடி வளர்ச்சி அதிகரிக்கும்.தலையில் சீப்பை வைத்து அழுத்தம் கொடுத்து சீவுவதை தவிர்க்க வேண்டும்.இதனால் முடி உதிர்வு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.