கால்களில் வெடிப்புகள் இருந்தால் வலி,அரிப்பு ஏற்படுவதோடு கால் அழகு முற்றிலும் நீங்கிவிடும்.இந்நிலையில் வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து பாத வெடிப்பை சரி செய்வது குறித்து தற்பொழுது விளக்கப்பட்டுள்ளது.
தேவைபடும் பொருட்கள்..
*தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
*வாசலின் – ஒரு தேக்கரண்டி
*வைட்டமின் ஈ காப்ஸ்யூல் – ஒன்று
*கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்..
முதலில் ஒரு கற்றாழை மடலை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு ஜெல்லை பிரித்தெடுத்துக் கொள்ளவும்.
பிறகு மிக்ஸி ஜாரில் கற்றாழை ஜெல்லை போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி வாசலினை அதில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அதன் பிறகு ஒரு வைட்டமின் ஈ காப்ஸ்யூலை அதில் சேர்த்து நன்கு கலக்கி கால் பாதங்களில் தடவி கொள்ளவும்.இதை இரவு நேரத்தில் செய்தால் விரைவில் பாத வெடிப்புகள் நீங்குவதை கண் கூட பார்க்க முடியும்.இரவு முழுவதும் அந்த பேஸ்டை காலில் இருக்கும் படி செய்து மறுநாள் வெந்நீரில் பாதங்களை கழுவவும்.
தேவையான பொருட்கள்..
*தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
*மருதாணி இலை – 1/4 கைப்பிடி அளவு
செய்முறை விளக்கம்..
முதலில் 1/4 கைப்பிடி மருதாணி இலையை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
இந்த மருதாணி பேஸ்டை ஒரு கிண்ணத்தில் போட்டு 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.இந்த பேஸ்டை பாத வெடிப்புகளில் தடவி ஒரு மணி நேரத்திற்கு உலவிடவும்.
பிறகு வெந்நீரில் கால்களை கழுவி துடைத்துவிட்டு சிறிது தேங்காய் எண்ணெயை பாதங்களில் தடவவும்.இப்படி செய்து வந்தால் கால் பாத வெடிப்பு சில தினங்களில் மறைந்துவிடும்.