தயிரை இப்படி பயன்படுத்தினால்.. பனி காலத்திலும் பாதங்கள் பஞ்சு போன்று மிருதுவாக இருக்கும்!!

0
103

கால் பாதங்களில் உள்ள சொரசொரப்பு தன்மை நீங்கி மிருதுவாக இருக்க நாம் அனைவரும் ஆசைக் கொள்கிறோம்,ஆனால் எல்லோருக்கும் பாதங்கள் மிருதுவாக இருப்பதில்லை.பனி காலத்தில் குதிகால் வெடிப்பு,பாத சுருக்கம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.இந்த பாதிப்புகளில் இருந்து தங்கள் பாதங்களை காத்துக் கொள்ள அருமையான தயிர் பேக் தயார் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

பாதங்களின் மீது படியும் இறந்த செல்களை அகற்ற தினமும் இரவு நேரத்தில் இந்த க்ரீமை பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)தயிர் – இரண்டு தேக்கரண்டி
2)பேக்கிங் சோடா – கால் தேக்கரண்டி
3)பெட்ரோலியம் ஜெல் – கால் தேக்கரண்டி
4)ஷாம்பு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

**கிண்ணம் ஒன்றை எடுத்து சுத்தமான பசுந் தயிர் இரண்டு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

**பிறகு அதில் பேக்கிங் சோடா கால் தேக்கரண்டி அளவு சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

**பின்னர் கால் தேக்கரண்டி அளவிற்கு பெட்ரோலியம் ஜெல்லை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

**அடுத்து அதில் ஒரு தேக்கரண்டிஷாம்பு சேர்த்து நுரை வரும் வரை கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

**பின்னர் பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி பாதங்களை வைத்து நன்றாக ஊறவிட வேண்டும்.பிறகு ஒரு பிரஸ் கொண்டு வெடிப்புகள் மீது ஸ்க்ரப் செய்ய வேண்டும்.

**அதன் பிறகு தயாரித்து வைத்துள்ள தயிர் க்ரீமை பாதங்கள் மீது அப்ளை செய்து ஸ்க்ரப்பர் கொண்டு தேய்க்க வேண்டும்.

**பிறகு வெது வெதுப்பான தண்ணீரில் பாதங்களை வைத்து நன்றாக கழுவ வேண்டும்.பிறகு காட்டன் துணியில் பாதங்களை துடைத்த பிறகு சிறிது தேங்காய் எண்ணெயை அப்ளை செய்ய வேண்டும்.

**இதை தொடர்ந்து செய்து வந்தால் பாதங்களில் உள்ள சொரசொரப்பு நீங்கி மிருதுவாக மாறும்.

மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
2)வேப்பிலை – கால் கப்
3)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

**முதலில் வேப்பிலையை சுத்தம் செய்து மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

**பிறகு அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி வெண்ணெய் ஊற்றி உருகும் வரை சூடாக்க வேண்டும்.

**பின்னர் அரைத்த வேப்பிலை பேஸ்டை அதில் சேர்த்து கலந்துவிட வேண்டும்.அடுத்து கற்றாழை மடலில் இருந்து ஜெல்லை பிரித்து வேப்பிலை பேஸ்ட்டில் சேர்த்து சுண்டும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

**இந்த பேஸ்டை ஆறவைத்து கால் பாதங்களில் அப்ளை செய்து வந்தால் வெடிப்புகள் நீங்கி மிருதுவாக இருக்கும்.

Previous articleஅடடே பசும் பாலில் குங்குமப்பூ போட்டு குடிப்பது இவ்வளவு நன்மைகளை கொடுக்குமா!!
Next articleமூட்டு வீக்கத்தை குணப்படுத்திற்கு மருந்தாகும் திராட்சை சீட்ஸ்!! இதை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?