மிளகுத்தூளை இப்படி பயன்படுத்தினால் 6 கிலோ வரை உடல் எடையை குறைக்கலாம்!! எப்படி தெரியுமா!! 

Photo of author

By Sakthi

மிளகுத்தூளை இப்படி பயன்படுத்தினால் 6 கிலோ வரை உடல் எடையை குறைக்கலாம்!! எப்படி தெரியுமா!!
உடல் எடை அதிகரித்து விட்டதால் அதை குறைக்க தினமும் படாதபாடு படும் அனைவருக்கும் உடல் எடையை வேகமாக  குறைக்க உதவும் ஒரு எளிமையா டிப்ஸ் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பிடித்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். நாம் என்ன உணவு சாப்பிடுகிறோமோ அதற்கு ஏற்ப நாம் சில பயிற்சிகள் செய்ய வேண்டும். ஆனால் பிடித்த உணவுகளை சாப்பிட்டு விடுகிறோம். ஆனால் உடல் பயிற்சிகள் செய்வதற்கு நாம் சங்கடம் அடைகிறோம்.
ஆனால் உடல் எடை அதிகரித்து விட்டால் அதை குறைப்பதையே ஒரு லட்சியமாக குறிக்கோளாக எடுத்துக் கொண்டு பல முயற்சிகளையும், மருத்துவ முறைகளையும், மருந்துகளையும் நாம் எடுத்துக் கொள்கிறோம். அதற்கு பதிலாக இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் இந்த மருத்துவ முறையை நாம் பின்பற்றினால் உடல் எடையை வேகமாகவும் சுலபமாகவும் குறைக்கலாம்.
தேவையான பொருட்கள்…
* கரு மிளகுத் தூள்
* தேன்
* எலுமிச்சை சாறு
செய்முறை…
முதலில் ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் கரு மிளகுத் தூள்(இடித்தது) ஒரு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில்  மூன்று தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக இதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
நன்கு கலந்து கொண்ட பின்னர் இந்த கலவையை அப்படியே குடிக்கலாம். இதை நீங்கள் தொடர்ந்து 3 முதல்4 மாதங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்துக் கொண்டால் உடல் எடை வேகமாக குறையும்.