உருளைக்கிழங்கை இப்படி பயன்படுத்தினால் கண் கண்ணடி அணிவதால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்!!

Photo of author

By Divya

கடந்த காலங்களில் பெரியவர்கள் மட்டுமே கண் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை சந்தித்து வந்தனர்.ஆனால் இன்று வயது வித்தியாசமின்றி அனைவரும் கண் பார்வை குறைபாடு,கண் எரிச்சல்,கண் வலி,கண்களில் நீர் வடிதல் போன்ற பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.இதனால் சிறு வயதிலேயே கண்ணாடி அணியும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுவிடுகின்றனர்.இப்படி பல வருடங்களாக கண்ணாடி அணிவதால் கண்களில் தழும்புகள் ஏற்படுகிறது.இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹோம் ரெமிடியை ட்ரை பண்ணவும்.

தேவையான பொருட்கள்:-

1)வெள்ளரிக்காய்
2)வைட்டமின் ஈ மாத்திரை
3)பாதாம் எண்ணெய்
4)பால்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு வெள்ளரிக்காயை தோல் சீவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.;பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு 25 மில்லி காய்ச்சாத மாட்டு பால் சேர்த்து க்ரீமி பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இதை ஒரு கிண்ணத்தில் போட்டு ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்யுங்கள்.அதன் பிறகு ஒரு வைட்டமின் ஈ மாத்திரையை கலந்து கொள்ளுங்கள்.

இந்த க்ரீமை கண்களை சுற்றியும்,மூக்கு பகுதியிலும் அப்ளை செய்து நன்கு ஸ்கரப் செய்யுங்கள்.ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி சுத்தம் செய்யவும்.இப்படி தினமும் செய்து வந்தால் கண்ணாடி அணிவதால் உருவாகும் தழும்புகள் சீக்கிரம் நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)உருளைக்கிழங்கு
2)தேன்

செய்முறை விளக்கம்:-

ஒரு உருளைக்கிழங்கை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.பிறகு அதன் தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்து கொள்ளுங்கள்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக கலந்து கண்களை சுற்றி அப்ளை செய்தால் கண்ணாடி அணிவதால் உருவான தழும்புகள் மறைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)தக்காளி
2)சர்க்கரை

செய்முறை விளக்கம்:-

ஒரு தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கண் மற்றும் மூக்கு பகுதியை சுற்றி அப்ளை செய்யுங்கள்.

அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் சுத்தம் செய்யுங்கள்.இவ்வாறு ஒரு மாதத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால் கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகள் மறைந்துவிடும்.