இந்த பொருட்களை இப்படி பயன்படுத்தினால் எலிகள் உங்கள் வீட்டு பக்கமே அண்டாது!!
வீட்டில் நடமாடும் எலிகளால் நமக்கு எலி காய்ச்சல், ஆஸ்துமா போன்ற நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் வீட்டில் சுற்றி திரியும் எலிகளை விரட்ட சூப்பர் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
உருளைகிழங்கு
ஒரு உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் போட்டு உலர்த்திக் கொள்ளவும். பிறகு இதை பவுடராக்கி வீட்டில் எலி நடமாட்டம் உள்ள இடத்தில் தூவி விடவும். உருளைக்கிழங்கு எலிகளுக்கு பிடிக்கும். இருப்பினும் இந்த உருளைக்கிழங்கு மாவை எலிகள் அதிகளவு உண்டால் வயிறு வீங்கி இறந்து விடும்.
வெங்காய தோல்
பெரிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயத்தின் தோலை அரைத்து தூளாக்கி கொள்ளவும். இதை எலி நடமாடும் பகுதியில் தூவி விடவும். எலிகளுக்கு வெங்காயத்தில் இருந்து வரும் வாசனை பிடிக்காது. எனவே இந்த வாடை தாங்க முடியாமல் எலிகள் தெறித்தோடி விடும்.
பிரிஞ்சி இலை
பிரியாணிக்கு பயன்படுத்தக் கூடிய பிரிஞ்சி இலை 4 அல்லது 5 எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
இந்த பொடியை எலி நடமாட்டம் உள்ள இடத்தில் தூவி விட்டால் அதன் வாசனையால் எலிகள் தெறித்தோடி விடும். பிரிஞ்சி இலை பொடியை நீரில் கலந்து ஸ்ப்ரே செய்தாலும் எலி தொல்லை கட்டுப்படும்.
விளக்கெண்ணெய்
அரை கிளாஸ் நீரில் 1 தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். இதை எலி நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்தால் விளக்கெண்ணெய் வாசனைக்கு எலிகள் வராது.