நமது பாட்டி மற்றும் அம்மா காலத்தில் கல் அடுப்பு மற்றும் மண் அடுப்பில் சமைக்கும் வழக்கம் இருந்தது.ஆனால் தற்பொழுது கேஸ் அடுப்பு,கரண்ட் அடுப்பு வந்து விட்டதால் சிரமமின்றி சமையல் செய்ய முடிகிறது.
சுலபமாக சமையல் செய்ய முடிவதோடு வேலை மற்றும் நேரம் சேமிக்கப்படுவதால் அனைத்து மக்களும் கேஸ் மற்றும் கரண்ட் அடுப்பிற்கு மாறி விட்டனர்.கேஸ் அடுப்பு பயன்படுபவர்களுக்கு அதை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது என்பது சிரமமான செயலாக இருக்கிறது.
ஆனால் கரண்ட் அடுப்பை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் இடம் மாற்றலாம்.கரண்ட் அடுப்பை பயணம் செய்யும் போது,வீடு மாறும் போது எளிதில் எடுத்து செல்ல இயலும் என்பதால் வாடகை வீட்டில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் கரண்ட் அடுப்பையே பயன்படுத்துகின்றனர்.
கரண்ட் அடுப்பு பயன்படுத்துவதை விட அதை முறையாக பராமரிக்க தெரிந்திருக்க வேண்டும்.கரண்ட் அடுப்பை சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும்.அடுப்பிற்கு அடியில் வட்ட வடிவில் இருக்கும்.அதை தூசு இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
கரண்ட் அடுப்பு பயன்படுத்தும் போது அதில் இருக்கின்ற காயில் சூடாகும்.இதை குளிர்விக்க அடுப்பிற்கு அடியில் Fan சுற்றும்.Fan-ல் தூசு படிந்திருந்தால் காயில் சூடு வெளியேறாமல் விரைவில் பழுதடைந்து விடும்.எனவே ஒரு பிரஷ் பயன்படுத்தி Fan-ஐ அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
சமைத்து முடித்த பிறகு கரண்ட் அடுப்பின் பிளக்கை கரண்ட் போர்டில் இருந்து கழட்டி விட வேண்டும்.இல்லையென்றால் பிளக் பின் சூடாகி சேதமடைந்துவிடும்.உணவு சமைத்த பின்னர் கரண்ட் அடுப்பில் இருக்கின்ற ஆப் பட்டனை அணைத்துவிட வேண்டும்.நேரடியாக சுவிட்சை ஆப் செய்தால் அடுப்பு விரைவில் பழுதடைந்துவிடும்.
அடுப்பில் படிந்த அழுக்குகளை நீர் ஊற்றி துடைக்க கூடாது.இதனால் கரண்ட் அடுப்பு பழுதடைந்து விடும்.ஆகையால் ஒரு காட்டன் துணியை நீரில் நனைத்து நன்கு பிழிந்து பின்னர் அடுப்பை துடைக்க வேண்டும்.
இன்டக்ஷன் ஸ்டவ்வில் வாட்ஸ் திறன் 1600 இருந்தால் 1300க்குள் பயன்படுத்த வேண்டும்.குறைவான வாட்ஸில் சமைப்பதால் கரண்ட் அடுப்பு நீடித்து உழைக்கும்.இன்டக்ஷன் ஸ்டவ்வில் கனமான பாத்திரங்களை வைத்து சமைப்பதை தவிர்க்க வேண்டும்.நீங்கள் வாங்கிய இன்டக்ஷன் ஸ்டவ்வை இப்படி பராமரித்தால் நீண்ட வருடங்கள் நீடித்து உழைக்கும்.