இதை மீறினால் அவ்வளவுதான்.. அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

Photo of author

By Rupa

இதை மீறினால் அவ்வளவுதான்.. அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

Rupa

If you violate this, that's it.. Government has issued a swift order to bus drivers and conductors!!

TN: தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று பல்வேறு திட்டங்கள் அமலில் உள்ளது. அந்த வகையில் இந்த முறை சட்டப்பேரவையில் கூடுதல் திட்டங்களை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில் மேலும் அரசு ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை போக்குவரத்து துறை அமைச்சர் சிவங்கர் வெளியிட்டுள்ளார். அதில், மாற்றுத் திறனாளிகள் பலர் தொடர்ந்து போக்குவரத்து துறை மீது புகார் அளித்து வருகின்றனர்.

அவர்கள் பேருந்து நிலையத்தில் இருந்தால், பேருந்தை யாரும் நிறுத்துவதில்லை என பல்வேறு புகார்கள் வந்த வண்ணமாக உள்ளதாம். இதனையெல்லாம் திருத்தி தற்பொழுது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் முதலாவதாக, எந்த ஒரு மாற்றுத்திறனாளியும் பேருந்து நிறுத்தத்தில் இருந்தால் கட்டாயம் பேருந்தை நிறுத்தி அவர்களை ஏற்றிக் கொள்ள வேண்டும். அதேபோல நடத்துனரும், பேருந்தில் இடமில்லை என என அவர்களிடம் கூறக்கூடாது.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் சீட்டுகளில் அவர்களை அமர்த்த விட வேண்டும். மேற்கொண்டு அவர்களிடம் நடத்துனர்கள் கடிந்து கொள்ளாமல், தன்மையுடன் பேசி பயண சீட்டு வழங்க வேண்டும்.அதேபோல அவர்கள் இறங்கும்போதும் காத்திருந்து பொறுமையாக உதவி செய்ய வேண்டும். யாரேனும் மாற்றுத்திறனாளிகள் இருக்கையில் அமர்ந்திருந்தால் அவர்களை வேறு ஒரு இடத்தில் அமர செய்துவிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு விடுத்த உரிய இடத்தை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

அதேபோல பேருந்து எடுக்கும் வரை மாற்றுத்திறனாளி இடத்தில் யாரையும் அமர விடக்கூடாது. யாரும் வரவில்லை என்று சாதாரண பயணி அமர்ந்தபின் மாற்றுத்திறனாளிகள் இறுதியில் வந்தால் கூட அவர்கள் இடத்தை மாற்றி இவர்களை அமர வைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ஏறும் போதும் இறங்கும் போதும் மிகுந்த கவனமுடன் பேருந்தை இயக்க வேண்டும். அதுமட்டுமின்றி அவர்களுக்கு உரிய உரிமை தேசிய அடையாள அட்டையை வைத்திருந்தால், அவர்களுடன் பயணம் செய்வோர் முதற்கொண்டு சாதாரண நகர பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கலாம். இருவருக்கும் கட்டணமில்லா பயணச்சீட்டும் நடத்துனர் வழங்க வேண்டும்.

அதேபோல அவசர காலங்களில் பெண்களின் பாதுகாப்பினங்க மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கும் சேர்த்து கட்டணம் இல்லா பேருந்து நிறுத்தத்தில் கோரிக்கையின் அடிப்படையில் பேருந்து நிறுத்தலாம். இறுதியில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பயிற்சியின் போது சிறப்பு விருந்தினராக மாற்றுத்திறனாளி வரவழைத்து அவர்களின் பேருந்து பயண கருத்தை தெரிவிக்கும்படி செய்யலாம். வரும் நாட்களில் பயணிக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அதனை சரி செய்து பயணம் செய்யும்போது அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனக் கூறியுள்ளார்.