கடந்த ஒருமாத காலமாக தமிழகத்தில் இருந்த தேர்தல் பரபரப்பு இப்போது தான் அடங்கியுள்ளது.தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து தமிழகத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.வேட்ப்பாளர் தேர்வு, வேட்புமனு தாக்கல், பரப்புரை என தமிழகமே பரபரப்பாக காணப்பட்டது.அந்தப் பரபரப்பின் உச்சகட்டமாக நேற்று முன்தினம் தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது.
இதனை அடுத்து மாலை 7 மணி அளவில் அனைத்து வாக்குச் சாவடிகளில் இருந்தும் வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு தகுந்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு அங்கே பத்திரமாக வைக்கப்பட்டு இருக்கிறது. அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவ படை மற்றும் மாநில காவல்துறையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
அதேபோல ஆளும் கட்சியான அதிமுகவும் எதிர்கட்சியான திமுகவும் தங்களுடைய கட்சி நிர்வாகிகளுக்கு பல அறிவுரையை வசங்கியுள்ளனர். அதாவது வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் அந்தந்த பகுதியில் இருக்கும் கூட்டணி கட்சியினர் மற்றும் தாய் கழகத்தினர் கண்ணும் கருத்துமாக கண்காணித்து வரவேண்டும் எதிர்கட்சிகளின் சூழ்ச்சியில் இருந்து நாம் தப்பிக்க வேண்டும் என்றால் நிச்சயமாக இதனை நாம் கருத்துமாக செய்துதான் ஆகவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களும் தன்னுடைய கட்சி தொண்டர்களுக்கும் கூட்டணி கட்சி தொண்டர்களுக்கும் இது தொடர்பாக பல விதமான அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். அதாவது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேர்தல் களத்தில் நிலைமை உணர்ந்து மிகவும் பொறுப்புடனும் ஒருங்கிணைப்பும் சோர்ந்து போகாமல் பணியாற்றிய திமுகவின் தோழர்கள் எல்லோருக்கும் மிகுந்த நன்றி என தெரிவித்திருக்கிறார்.
அதிமுக மற்றும் பாஜக என்ற இரு அரசுகளின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அடக்குமுறை ஒருசில காவல்துறை அதிகாரிகளின் பாரபட்சமான நடவடிக்கை இவற்றுக்கு நடுவில் கொரோனா தொற்று போன்றவற்றை சமாளித்து சிறப்பாக செயலாற்றிய எல்லோருக்கும் நன்றி என தெரிவித்திருக்கிறார்.
அதேபோல நாகர்கோவில் திருவையாறு விருதுநகர் உள்ளிட்ட வாக்குச்சாவடிகளில் நம்முடைய கட்சிக்கு அளித்த வாக்குகள் தாமரைக்கு விழுந்ததாக தெரியவந்திருக்கிறது. மதுரவாயல் வாக்குச்சாவடி அருகே பொதுமக்களை பார்த்து சாதியை குறிப்பிட்டு அமைச்சர் பெஞ்சமின் மிரட்டல் விடுத்தது, தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆதரவாளர்கள் என்று பல்வேறு சம்பவங்களை
ஸ்டாலின் குறிப்பிட்டு தெரிவித்திருக்கிறார்.
வேளச்சேரி சட்டசபைத் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இரண்டு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றது, ஒட்டன்சத்திரம் மற்றும் மானாமதுரை சட்டசபைத் தொகுதிகளில் நடைபெற்ற அத்துமீறல்கள் போன்ற சம்பவங்கள் மீது கடுமையான புகார்கள் இதுபோன்ற சம்பவங்கள் எல்லா பகுதிகளிலும் மதன் நடந்திருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் இவை அனைத்தும் திமுகவின் தோல்வி பயத்தை காட்டுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. சுமார் பத்து வருட காலமாக ஆட்சியில் இல்லாத விரக்தியில் திமுக இந்தமுறையும் ஆட்சி நம் கைவிட்டு போய் விடுமோ என்ற அச்சத்தில் பேசிக்கொண்டு இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.