உங்கள் முகம் என்றும் இளமையாக இருக்க விரும்பினால் உலர் திராட்சையை கீழ்கண்டவாறு பயன்படுத்துங்கள்.நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)உலர் திராட்சை – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
கிண்ணம் ஒன்றை எடுத்து உலர் திராட்சை ஒரு தேக்கரண்டி அளவு போட்டுக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு ஊறவைக்க வேண்டும்.
இரவு நேரத்தில் ஊறவைத்தால் மறுநாள் காலை வரை காத்திருக்க வேண்டும்.இந்த உலர் திராட்சையை நீருடன் மிக்சர் ஜாரில் போட்டு அரைக்க வேண்டும்.
அதன் பிறகு முகத்தை கழுவ இந்த நீரை உபயோகிக்கலாம்.உலர் திராட்சையை பேஸ்ட் பதத்திற்கு அரைத்து முகத்தில் பூசினால் கருவளையம் நீங்கும்.
அதேபோல் சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் தழும்புகள் குணமாகும்.உலர் திராட்சை பேஸ்டை முகத்தில் பூசினால் சருமத்திற்கு இயற்கை பொலிவு கிடைக்கும்.
உலர் திராட்சை ஊறவைத்த நீரை குடித்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.சருமத்தில் காணப்படும் சுருக்கங்கள் நீங்க உலர் திராட்சை பேஸ் பேக் ட்ரை பண்ணலாம்.
ஊறவைத்த உலர் திராட்சையை அரைத்து தேன் சேர்த்து முகத்தில் தடவினால் இயற்கை ஈர்ப்பதம் தக்கவைக்கப்படும்.உலர் திராட்சை பேஸ்ட்டை உடலில் பூசி மசாஜ் செய்து குளித்தால் ஒருவித பொலிவு கிடைக்கும்.
கருப்பு உலர் திராட்சை ஊறவைத்த நீரில் காட்டன் பஞ்சு போட்டு நினைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து தண்ணீர் கொண்டு துடைக்க வேண்டும்.இப்படி செய்தால் சருமப் பொலிவு அதிகரிக்கும்.உலர் திராட்சையில் உள்ள வைட்டமின் ஈ சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.சரும பளபளப்பை அதிகரிக்க உலர் திராட்சை ஊறவைத்த நீர் கொண்டு முகம் கழுவலாம்.முகப்பரு மற்றும் தழும்புகள் மறைந்து போக உலர் திராட்சை நீரை சருமத்திற்கு பயன்படுத்தலாம்.
இளம் வயதில் வரும் சரும வறட்சி,சுருக்கங்கள் அனைத்தும் குணமாக உலர் திராட்சை தண்ணீரை முகத்திற்கு பயன்படுத்தலாம்.