வினை தீர்க்கும் விநாயகரை இப்படி வழிபட்டால் உங்கள் வாழ்வில் கடன் என்ற சொல் இருக்காது!!

Photo of author

By Divya

வினை தீர்க்கும் விநாயகரை இப்படி வழிபட்டால் உங்கள் வாழ்வில் கடன் என்ற சொல் இருக்காது!!

Divya

Updated on:

if-you-worship-lord-ganesha-like-this-there-will-be-no-debt-in-your-life

வினை தீர்க்கும் விநாயகரை இப்படி வழிபட்டால் உங்கள் வாழ்வில் கடன் என்ற சொல் இருக்காது!!

கடன் இருக்கும் மனிதனால் நிம்மதியாக வாழ முடியாது.கடன் தொகை சிறியதோ,பெரியதோ எதுவாக இருந்தாலும் கடன் தான்.கடன் இல்லாத வாழ்க்கையை வாழத் தான் அனைவரும் ஆசைக் கொள்கிறோம்.ஆனால் ஏதோ ஒரு அவசர செலவிற்காக கடன் வாங்கும் சூழலுக்கு ஆளாகி விடுகிறோம்.

ஒருமுறை கடன் வாங்கி விட்டால் அதை திருப்பி கொடுப்பதற்குள் ஒரு வழியாகிவிடுவோம்.ஆனால் ஒருசிலருக்கு கடன் அடைக்க வழியே இல்லாமல் இருக்கும்.இவ்வாறு ஏற்பட்டிருக்கும் கடன் பிரச்சனையில் இருந்து தப்பிக்க கடன் வாங்கும் நிலை வராமல் இருக்க விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்.இந்த விநாயகர் வழிபாட்டை சனி அல்லது செவ்வாய் கிழமையில் செய்து வரலாம்.

மாவிலையை தோரணம் கட்டிக் கொண்டு உங்கள் வீட்டருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று கட்டுங்கள்.பிறகு ஒரு தீர்த்த குடத்தில் தண்ணீர் நிரப்பி விநாயகர் சிலைக்கு ஊற்றுங்கள்.

அதன் பின்னர் ஒரு மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றவும்.முடிந்தவர்கள் விநாயர்கருக்கு பிடித்த கொழுக்கட்டை,பொங்கல் சுண்டல் போன்ற நெய்வேத்தியம் படைக்கலாம்.

இவ்வாறு வாரத்தில் செவ்வாய் அல்லது சனிக்கிழமையில் விநாயகர் வழிபாடு செய்து வந்தால் தீராத கடன் பிரச்னை முழுமையாக தீரும்.