பாரதிராஜா சொல்லும் போதே உச்சிக்கொட்டிய கண்ணதாசன்.. செம கோவம் சுத்தமா பிடிக்கவில்லை – இளையராஜா!!

0
221
Ilayaraja angry with poet Kannadasan .. Ilayaraja says Kannadasan is like this..
Ilayaraja angry with poet Kannadasan .. Ilayaraja says Kannadasan is like this..

கவிஞர் கண்ணதாசன் ஒரு படத்திற்கு பாடல் எழுத வேண்டுமானால், சிச்சுவேஷன் என்னவென்று கேட்டு விட்டதா ல் பாடல் எழுதுவாராம். அதுமட்டுமன்றி சிச்சுவேஷன் அவருக்கு பிடித்தார் போல் இல்லை என்றால் உடனே காரித்துப்பி விடுவாராம். இதனை நம்ப முடிகிறதா ? கண்ணதாசன் இவ்வாறு செய்வார் என கூறியவர் இசையமைப்பாளர் இளையராஜா என்றால் நம்பத்தான் வேண்டும் அல்லவா.

இளையராஜா திரைத்துறையில் அறிமுகமான நேரத்தில், அவர் ஒரு டியூனை போட்டு முடிப்பதற்குள் அந்த பாடலுக்கான பல்லவியை கண்ணதாசன் கூறி விடுவாராம். இசைஞானி இளையராஜா “அன்னக்கிளி” படத்தின் மூலம் முதன்முதலாக சினிமா துறைக்குள் நுழைந்தவர். அவரின் இந்த முதல் படத்தில் தன்னுடைய முத்திரையையும் பதித்து விட்டார்.

ஒரு படத்தின் கதை நன்றாக இல்லை என்றாலும், அதில் இளையராஜாவின் இசை இருந்தால் அந்த படம் ஹிட்டாகும் என அனைவரும் நம்பினர். இளையராஜாவின் கால்ஷீட்டுக்காக அவருடைய அலுவலகத்தின் முன்பு அநேக கூட்டம் கூடி நின்றன.இவ்வாறு இசையமைப்பாளர் இளையராஜா வளர்ந்து வந்த காலகட்டத்தில் வந்த படம் தான் “நிறம் மாறாத பூக்கள்” இதனை பாரதிராஜா இயக்கியுள்ளார். இப்படத்தில் ஒரு பாடலை கண்ணதாசன் எழுதியுள்ளார்.

அப்படி எழுதப்பட்ட பாடல் தான் ” ஆயிரம் மலர்களே “. இந்த பாடல் உருவாகும் முன்பு இதற்கான சிச்சுவேஷனை கண்ணதாசன் இயக்குனரிடம் கேட்டாராம். ஆனால் இயக்குனர் கூறியதை கண்ணதாசன் கண்டு கொள்ளவே இல்லையாம். அதுமட்டுமன்றி இளையராஜாவிடம் டியூன் போட்டாச்சா ? நான் பாடல் எழுதட்டுமா ? என்று கேட்ட கண்ணதாசன் இளையராஜா டியூன் போட்டு முடிப்பதற்குள் பாடல் வரிகளை எழுதி கையில் கொடுத்து விட்டாராம். மேலும் அவர் சிச்சுவேஷனை கேட்கும் பொழுது எரிச்சல் ஓட்டும் விதமாக நடந்து கொண்டாராம் என தன் சொந்த அனுபவத்தை இளையராஜா பகிர்ந்துள்ளார்.

Previous articleவிஜய் -யின் 70-வது திரைப்படம் குறித்து இயக்குனர் கொடுத்த அப்டேட் ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !  
Next articleமணிரத்தனமே என்றாலும் எனக்கு இதெல்லாம் பிடிக்காது.. கறாராக NO சொன்ன நடிகர்!!