இந்தியாவின் ஆகச் சிறந்த இசையமைப்பாளரான இளையராஜா 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற படத்திற்கு இசையமைத்ததன் மூலம் சினிமா துறையில் தனது முதல் அடியை எடுத்து வைத்தார். தான் இசை அமைத்த முதல் படத்திலேயே மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதுவரை 1000 – திற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
இது மட்டும் இன்றி, சிறந்த இசையமைப்பாளருக்கான 4 தேசிய விருதுகளையும் இசைஞானி இளையராஜா வென்றுள்ளார். இசை உலகின் உச்சத்தில் இருக்கக்கூடிய இளையராஜா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அங்கு அவருடைய ரசிகை ஒருவர் ” ஏன் சினிமா துறையில் பெண் இசையமைப்பாளர்கள் இல்லை? ” என்ற கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு இசைஞானி இளையராஜாவும் சிரித்துக் கொண்டு ” உனக்கு விருப்பம் உண்டெனில் நீயே பெண் இசையமைப்பாளராக வந்துவிடு ” என்று கூறி இருக்கிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.