இளையராஜா தனது பாடல்கள் மீது உள்ள உரிமை குறித்து வழக்கு தொடுத்து இருந்தார். அவர் தொடுத்துள்ள வழக்கில், தனது இசையில் வெளியான 109 படங்களின் வாயிலாக உருவாகியுள்ள பாடல்களை தனது அனுமதி இன்றி இசை வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள மியூசிக் மாஸ்டர் இசை வெளியீட்டு நிறுவனம் எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் , youtube சேனலுக்கும் பயன்படுத்தக் கூடாது என்பதுதான்.
இன்று (பிப்ரவரி 13) இந்த வழக்கின் சாட்சிக்காக சென்னை உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நீதிபதி இளங்கோ முன் ஆஜராகி உள்ளார். இளையராஜா பாடல்களின் பதிப்புரிமை, அவருடைய சொத்துக்கள், அவருடைய ஒப்பந்தம் குறித்து குறுக்கு விசாரணையில் ஈடுபட்டிருந்தார் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராமன். இளையராஜா விசாரணை கூண்டு ஏறி, தமது முழு ஈடுபாடும் இசையின் மீது உள்ளது. அது தவிர்த்து வேறு எதுவும் இவ்வுலகில் தெரியாது
என்றுள்ளார். மேலும் தமக்குப் பெயர், புகழ், சொத்து இவை யாவும் சினிமா மூலம் தான் வந்துள்ளது என்று ஒப்புக்கொண்டு உள்ளார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வழக்கு வாதாடப்பட்டு பின்னர் நீதிபதி வழக்கை ஒத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.