மோடி இல்லன்னா வேற யாரு?!… இளையராஜாவின் பேச்சால் கொதிக்கும் திமுகவினர்!…

Photo of author

By அசோக்

மோடி இல்லன்னா வேற யாரு?!… இளையராஜாவின் பேச்சால் கொதிக்கும் திமுகவினர்!…

அசோக்

ilayaraja

இசைஞானி இளையராஜா இசையமைப்பதை தவிர வேறு எதிலும் எனக்கு கவனம் இல்லை என சொல்லுவார். என்னை யார் திட்டினாலும், விமர்சனம் செய்தாலும் அது என் கவனத்துக்கே வராது என்பார். நான் அவ்வளவு சாதனை செய்திருக்கிறேன். எனக்குதான் கர்வம் இருக்கணும். நீ என்ன சாதிச்சிருக்க?’ என கேட்பார்.

இளையராஜாவின் இசை எல்லோருக்கும் பிடித்து ஒன்று. அதிலும், 70,80களில் பிறந்தவர்கள் இப்போதும் அவரின் இசையைத்தான் கேட்டு ரசிக்கிறார்கள். அவர்களின் பயணங்களிலும், தனிமையிலும், இரவில் உறக்கத்திற்கு முன்பும் துணையாக இருப்பது ராஜாவின் பாடல்களைத்தான். அவர் ஆன்மிகத்தில் இருக்கும் வரை யாருக்கும் பிரச்சனை இல்லை. ஆனால், அரசியல்ரீதியாக கருத்து தெரிவித்தால் அது கண்டிப்பாக எதிர் கருத்துக்கள் எழுவே செய்யும்.

தமிழகத்தை பொறுத்தவரை திராவிட கட்சிகளுக்கே ஓட்டு போடுவார்கள். அதனால்தான் பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் 4 எம்.எல்.ஏக்கள் மட்டுமே வெற்றி பெற்றார்கள். ஒருகட்டத்தில் இளையராஜா பாஜகவுக்கு ஆதவாக கருத்து கூற துவங்கினார். ராமரின் மறு உருவம் மோடி என்றார். உடனே அவருக்கு மேல் சபை எம்.பி. பதவியும் கொடுத்தார்கள்.

ilayaraja

இப்போது ஆங்கில ஊடகம் ஒன்றில் பேசிய இளையராஜா ‘மவுண்ட் பேட்டன் காலத்திலிருந்து இந்தியாவில் பிரதமராக இருந்த எல்லோரையும் மோடியோடு ஒப்பிடுங்கள். இந்தியாவுக்கு மோடி என்ன செய்திருக்கிறார் என்றும் பாருங்கள். அப்போது உங்களுக்கு வித்தியாசம் புரியும். நான் 1988ல் காசிக்கு போயிருக்கிறேன். அப்போது அந்த இடம் எல்லோரும் சிறுநீர் கழிக்கும் இடம் போல இருக்கும். மோடிதான் அதை மாற்றியிருக்கிறார்.

கங்கையை சுத்தம் செய்திருக்கிறார். நாட்டுப்பற்று இல்லாவிட்டால் இதை செய்ய முடியாது. மற்ற பிரதமர்கள் மோடியை போல செய்யவில்லை. சரி.. மோடி வேண்டாம் என வைத்துக்கொள்வோம். இந்தியாவில் உள்ள எல்லோரும் ஏற்றுக்கொள்வது போல ஒரு தலைவனை நீங்கள் காட்ட முடியுமா?.. இது என்னுடைய தாழ்மையான கருத்து’ என பேசியிருக்கிறார். இதையடுத்து மோடியை பிடிக்காதவர்களும், திமுகவினரும் இளையராஜாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.