கிராமத்து மின்னல் திரைப்படமானது இயக்குனர் கே. ரங்கராஜ் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளியானது. திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்துள்ளார்.
ஜி. கே. இளங்கோ தயாரித்த இத்திரைப்படத்தில் ராமராஜன், ரேவதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். குறிப்பாக உதய கீதம் திரைப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ரேவதியே மீண்டும் தனக்கு ஜோடியாக ராமராஜன் அவர்கள் தீர்மானித்துள்ளார்.
கிராமத்து மின்னல் திரைப்படத்தின் கதையை பொன்மனச் செம்மல், அம்மன் கோவில் கிழக்காலே போன்ற புகழ்பெற்ற திரைப்பட கதைகளை இயற்றிய இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கதை வசனகர்த்தா என பன்முகங்களை கொண்ட பீட்டர் செல்வகுமார் எழுதி இருக்கிறார்.
ஜிகே வெங்கடேஷ் அவர்கள் தன்னுடைய நண்பருடன் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜிகே வெங்கடேஷ் அவர்களே இளையராஜாவிற்கு குருநாதர் அவர்.
இவருடைய அனைத்து படங்களிலும் கண்டிப்பாக இளையராஜா அவர்கள் ஓர் அங்கமாக விளங்குவது வழக்கம். அதேபோன்று கிராமத்து மின்னல் திரைப்படத்திலும் இவர் பாடல்களை இயற்றி இசையமைத்து அதனை பாடியும் கொடுத்துள்ளார். இவருடைய பாடல்களுக்காகவே இந்த திரைப்படமானது 100 நாட்கள் திரையில் திரையிடப்பட்டுள்ளது.