தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் வனிதா விஜயகுமார். இவர் அண்மையில் தன்னுடைய முன்னாள் கணவருடன் சேர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் என்னும் படத்தில் நடித்தார். இவருடைய மகள் இந்த படத்தை தயாரித்திருந்தார். வனிதா விஜயகுமார் இந்த படத்தின் கதையை எழுதி இயக்கமும் செய்திருந்தார்.
இந்த மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் படத்தில் இளையராஜா இசையமைப்பில் வெளியான மைக்கேல் மதன காமராசன் படத்தில் இடம்பெற்றிருந்த ராத்திரி சிவராத்திரி என்னும் பாடல் இடம்பெற்றிருந்தது. எப்பவும் போல என்னுடைய அனுமதி வாங்காமல் இந்த பாடலை இந்த படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று வழக்கு தொடர்ந்தார் இளையராஜா.
இதனை தொடர்ந்து வனிதா விஜயகுமார் இளையராஜாவை கடுமையாக விமர்சித்துள்ளார். ஆரம்பம் முதலே எங்களின் குடும்பத்திற்கும், இளையராஜா குடும்பத்திற்கும் பிரச்சனை இருந்து வருகிறது. இளையராஜா குடும்பத்தில் உள்ள எல்லோரும் எனக்கு நண்பர்கள் தான். பவதாரணி எனக்கு சகோதரி மாதிரி.
இளையராஜா குடும்பத்தில் உள்ள ஒரு பையன் என்கிட்ட கேட்டான். நீ என்னைய லவ் பண்ணுறியா இல்ல எங்க அப்பாவை லவ் பண்ணுறியா என்று. நான் உங்க அப்பாவை தான் லவ் பண்றேன் என்று அவனிடம் சொன்னேன். இதெல்லாம் இத்தனை நாட்களாக வெளியில் சொல்லாமல் இருந்தேன். இன்னைக்கு பணத்துக்காக இளையராஜா இப்படி வழக்கு தொடர்ந்ததால் இதெல்லாம் வெளிய சொல்ற மாதிரி ஆகிடுச்சு என்று பரபரப்பாக பேட்டி கொடுத்துள்ளார் வனிதா. வனிதாவின் இந்த பேட்டி திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.