தன்னுடைய பாடல்களை இசை கச்சேரிகளில் பாடக்கூடாது என நோட்டீஸ் விட்ட இளையராஜா!! 40 ஆண்டுகால நட்பு முறிவின் பின்னணி!!

Photo of author

By Gayathri

40 வருடங்களாக இசை உலகில் நண்பர்களாக இருந்த இளையராஜா மற்றும் எஸ் பி பாலசுப்ரமணியம் இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்பட எஸ்பி பாலசுப்ரமணியம் தான் காரணம் என கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு வெற்றி பாடல்களை ரசிகர்களுக்கு கொடுத்து ரசிகர்களின் மனதை பெரிதும் கவர்ந்தவர்கள். சில காரணங்களுக்காக அவர்கள் பிரிந்து விட்டனர். இந்த பிரிவிற்கான காரணம் குறித்து இந்த பதிவில் காண்போம்.

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு அமெரிக்காவில் இசை கச்சேரி நடத்துவதற்கான 2016 ஆம் ஆண்டு எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களை அழைத்துள்ளார். இந்த இசை கச்சேரியில் பாடுவதற்காக அதிக தொகை கேட்ட எஸ் பி பி. அத்தொகை தனக்கு கிடைக்காததால் அந்த இசைக் கச்சேரிக்கு செல்லவில்லை.

இதனால் அமெரிக்காவில் நடைபெற்ற இசைக் கச்சேரிக்கு வேறு சிலரை அழைத்து சென்றுள்ளார் இளையராஜா. இதுவே இவர்களுக்கிடையில் விரிசல் வர காரணமாக அமைந்துள்ளது. இதன் பிறகு தான் இவர்கள் இருவரும் பிரிந்து பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் பிரச்சினையினை மனதில் வைத்து எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் அமெரிக்காவில் நடத்தவிருந்த இசை கச்சேரியில் தன்னுடைய பாடல்களை பாடக்கூடாது என வக்கீல் நோட்டீசனை அனுப்பி இருக்கிறார் இளையராஜா அவர்கள். இந்த நோட்டீஸ் ஆனது எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு மட்டும் இன்றி அவரது மகனான எஸ்பி சரண் மற்றும் சித்ரா அவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வக்கீல் நோட்டீசினை யாருக்கும் தெரியாமல் இளையராஜா அவர்கள் நேரடியாக எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு அனுப்பிய நிலையில், அவர்தான் அதனை பேஸ்புக்கில் போட்டு இந்த பிரச்சனை இனி மிகப்பெரிய பேசும் பொருளாய் மாற்றி உள்ளார் என்ற தகவல்களும் வெளியாகி இருக்கின்றன. அந்த facebook பதிவில் எஸ் பி பாலசுப்ரமணியன் அவர்கள் தெரிவித்திருப்பது, நான் இனி எந்த இசைக்கச்சேரிகளிலும் இளையராஜாவின் பாடல்களை பாட மாட்டேன் என்பதாகும்.