சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகிய ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பு பெற்று இருக்க கூடிய திரைப்படமாக குட் பேட் அக்லி திரைப்படம் அமைந்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் இளையராஜாவின் உடைய பாடல்கள் அவருடைய அனுமதி இன்றி போடப்பட்டிருப்பதாக அதற்கு இழப்பீடு தர வேண்டும் என இளையராஜா தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தன்னுடைய பாடலை யார் பயன்படுத்தினாலும் அதற்கு ராயல்டி கேட்பதை வழக்கமாக வைத்திருக்கக் கூடிய இளையராஜா தற்போது மைத்திரி மூவிஸ் தயாரிப்பில் வெளியாகியிருக்கக்கூடிய இந்தத் திரைப்படத்திலும் தன்னுடைய பாடல் பயன்படுத்தப்பட்டிருப்பதால் ராயல் டி கேட்டிருக்கிறார். அதோடு மட்டுமல்லாது தனக்கு 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கைப்பட மன்னிப்பு கடிதம் அதுவும் 7 நாட்களுக்குள் எந்த நிபந்தனையும் இல்லாமல் எழுதிக் கொடுக்க வேண்டும் என்றும் படத்தில் இருந்து தன்னுடைய இரண்டு பாடல்களான ஒத்த ரூபாயும் தாரன் போன்ற பாடல்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் தெரிவித்த நிலையில் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பை பெற்று வருகிறார். மறுபடியும் இளையராஜாவின் ரசிகர்கள் அவர் கேட்பதில் என்ன தவறு என்பது போல அவருக்கு ஆதரவையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இளையராஜாவின் மகனான யுவன் சங்கர் ராஜாவின் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் இருக்கக்கூடியதாவது :-
வை ராஜா வை என்ற திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இவன் சங்கர் ராஜா திரைப்படத்தில் இசையமைத்திருக்கிறார். அப்பொழுது அந்த படத்திற்கு அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா என்ற பாடலை வைக்கலாம் என யோசித்த பொழுது யுவன் சங்கர் ராஜா அவர்கள் தன்னுடைய தந்தையிடம் NOC பெறுவதற்காக சென்று கேட்டிருக்கிறார். ஆனால் இளையராஜாவோ இந்த பாடல் ஏற்கனவே இப்பொழுது காலகட்டத்திற்கு ஆனால் இளையராஜாவோ இந்த பாடல் ஏற்கனவே இப்பொழுது காலகட்டத்திற்கு ஏற்றார் போல் மாற்றப்பட்டுள்ளது இதில் நீ மாற்றி என்ன இருக்கிறது என கேள்வி கேட்டாராம். தந்தையாக இருந்தால் கூட அவருடைய பாடலை பயன்படுத்த வேண்டும் என்றால் அவரிடம் நாக் பெற வேண்டும் என யுவன் சங்கர் ராஜா தெரிவித்திருக்க கூடிய வீடியோ தான் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.