இசை உலகின் பெரிய ஜாம்பவான் ஆன இளையராஜா தனது ஆன்மீக பயணத்தை எங்கிருந்து தொடங்கினார் என்பது குறித்து பேட்டி ஒன்றில் விவரித்துக் கூறியுள்ளார் அதிலும் நான் ஏன் மூகாம்பிகை அம்மன் மீது இவ்வளவு பற்றுடன் இருக்கிறேன் என்பதையும் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, இளையராஜாவின் குருவான ஜி கே வெங்கடேசன் அவர்களின் கச்சேரியானது மைசூரில் நடைபெற்றது அந்த கச்சேரிக்கு நான் முதற்கொண்டு 75 இசை கலைஞர்கள் சென்றிருந்தோம் அச்சமயத்தில் என் நண்பன் வைத்தியநாதன் அனைத்து பொறுப்பையும் என்னிடம் கொடுத்து விட்டார்.
தனியாக நின்று அந்த கச்சேரியை சிறப்புடன் முடித்துக் கொடுத்தேன். அது 1974 காலம் என்பதால் நாங்கள் தங்கி இருந்த ரூம்களில் எந்த ஒரு போன் வசதியும் இல்லை, கச்சேரி முடிந்தவுடன் அனைவரும் அவரவர் ரூமுக்கு சென்று விட்டோம். மேற்கொண்டு எங்களுடன் வந்தவர்கள் மைசூரை சுற்றி பார்க்க சென்றுவிட்டார்கள். அதே போல வைத்தியநாதனும் கச்சேரிக்கு முன்பே மைசூர் வந்து விட்டோம் மூகாம்பிகை கோவிலுக்கு போலாமா என்று கேட்டார். நானும் போலாம் என்று ஒப்புக்கொண்டேன்.
ஆனால் இவர்கள் அனைவரும் மைசூரை சுற்றிப்பார்க்க சென்ற பொழுது என்னை ரூமுக்குள் வைத்து பூட்டிவிட்டு சென்றுவிட்டார்கள். அச்சமயம் எனக்கு தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு காய்ச்சல் வந்துவிட்டது. அவ்வளவுதான் இதற்கு மேல் கிடைக்க மாட்டேன் என நினைத்துக் கொண்டேன். பின்பு சென்றவர்கள் அனைவரும் வந்தனர். என் நண்பன் வைத்தியநாதனும் திரும்பி வந்து என்னை மன்னித்துவிடு நான் தெரியாமல் பூட்டிவிட்டு சென்றுவிட்டேன் எனக் கூறினார். உனக்கு இப்படி உடம்பு சரி இல்லையா என்று கேட்டுவிட்டு உன்னால் மூகாம்பிகை கோவிலுக்கு வர முடியுமா என கேட்டார். என்னால் முடியாத சூழ்நிலை தான் ஆனால் வருகிறேன் என கூறிவிட்டேன்.
அப்படி சொன்னதுமே எனக்குள் ஒரு புத்துணர்ச்சி வந்துவிட்டது. மாத்திரை தண்ணீர் உணவு எதுவும் இல்லாத எனக்கு எங்கிருந்து அப்படி ஒரு புத்துணர்ச்சி வந்ததென்று தெரியவில்லை. பின்பு அந்த கோவிலுக்குள் காலடி எடுத்து வைக்கும் பொழுது எனது இதயம் படபடத்தது. இது அனைத்தும் அவளின் செயல் என எனக்கு அப்பொழுது தெரியவில்லை, பின்பு அந்த கடவுளிடம் நான் எதுவும் கேட்கவில்லை. கைகூப்பி உன்னை பற்றி இரண்டு கீர்த்தி அடுத்த முறை வரும்பொழுது ஆவது பாட வேண்டும் என கேட்டேன். அது அந்நாளிலேயே நடந்தது. கோவிலுக்குள் சென்ற பொழுது நாங்கள் வயலின் எடுத்து சென்று இருந்தோம்.
ஒரு வயலினை அம்பாள் கையில் கொடுத்து பூசித்து மற்றொன்றை நான் வைத்திருந்தேன். அங்கு சாமி ஊர்வலம் வந்து இறங்கியதும் உடனடியாக என் கையில் அதை கொடுத்து வாசிக்க சொன்னார்கள். பின்பு நான் வாசிப்பதை என் நண்பன் ரெக்கார்ட் செய்தும் வைத்துக்கொண்டான். அதனைத் தொடர்ந்து என்னை பாடவும் சொன்னார், எனக்கு தெரிந்த அம்பால் குறித்த ஒரு கீர்த்தியை மட்டும் பாடிவிட்டு அப்படியே நின்றேன். மீண்டும் என் நண்பன் பாடு என்று கை அசைக்கவே எனக்கு தெரிந்ததை பாடினேன்.
அவ்வளவுதான் திரும்பவும் நாங்கள் இருந்த அறைக்கே வந்துவிட்டோம். அங்கு வந்து தான் என்ன நடந்தது என்பது குறித்து எனது நண்பன் விவரித்து கூறினான். அம்பாள் ஊர்வலம் வந்துவிட்டு இறங்கும் சமயத்தில் நீ பாடும் பாடலை கேட்டுள்ளார். நீ டெஸ்டில் பாஸ் ஆகிவிட்டாய் என்று கூறினார். அங்கிருந்துதான் எனது ஆன்மீக பயணம் தொடர்ந்தது என்று அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.