இளையராஜா ஒரு மேடையில் அரசு செய்யாத ஒன்றை சிவாஜிக்காக நான் செய்தேன் என்று மேடையில் பேசியுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு மருதமோகன் என்பவர் சிவாஜிகணேசன் என்ற நூலை வெளியிட்டார். அதில் பல்வேறு திரையுலகினர் கலந்து கொண்டனர். அதில் பேசிய இளையராஜா அரசு சிவாஜி கணேசன் அவருக்கு அரசு செய்யாததை நான் செய்தேன். இது யாருக்கும் தெரியாத உண்மை இப்பொழுது நான் சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
அந்த மேடையில் அவர் கூறியதாவது ” அண்ணனுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று திரை உலகினர் அனைவரிடமும் பணம் வசூலித்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது இயக்குனர் முத்துராமன் அவர்கள் என்னிடம் வந்து அண்ணனுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். உங்களால் முடிந்த தொகையை தாருங்கள். ரஜினி இவ்வளவு கொடுத்திருக்கிறார். கமல் இவ்வளவு கொடுத்திருக்கிறார் என்று சொல்லினார்.
உடனே நான் மொத்தம் எவ்வளவு தொகை வேண்டும் என்று நினைத்து வசூலை செய்கிறீர்கள் என்று கேட்டேன். ஒரு குறிப்பிட்ட தொகையை சொல்லி மேலும் ஒரு வெள்ளியில் குதிரை செய்து அதில் சிவாஜி அண்ணன் அமர்ந்திருக்கும் சிலையை பரிசையும் தர வேண்டும் என்று சொன்னார்.
நடிகர்கள் சாப்பிடும் ஒவ்வொரு அரிசியிலும் சிவாஜி கணேசன் என்ற பெயர் இருக்கிறது என்று அவர் சொல்லினார்.
உடனே நான் , அதில் உங்கள் பெயரும் இல்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள் முழு தொகையையும் நானே தருகிறேன் வேறு எந்த பெயரும் வரக்கூடாது என்று நானே முழு தொகையும் கொடுத்து விட்டேன் என்று சொன்னார்.
இது சிவாஜி அண்ணனுக்கும் தெரியும் கமலா அம்மா அவருக்கும் தெரியும் என்று கூறினார்.
இதைப் பார்த்து சிவாஜி நாம் யாரை வேண்டுமானாலும் மறக்கலாம் இளையராஜாவை மறக்க கூடாது என்று கமலா அம்மாவிடம் சொன்னாராம்.
தன் பெயரை தவிர வேறு எந்த பெயரும் இருக்கக் கூடாது என்று சொன்னது அவர் மேல் இருந்த பாசத்தில் தானே தவிர ,கர்வத்தில் இல்லை என, கண் கலங்கியபடி பேசி உள்ளார்.
சிவாஜி கணேசன் என்ற நடிகனுக்கு அரசு சரியான மரியாதையை தரவில்லை. அதனால் நான் இந்த மரியாதையை ஏற்றுக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.