சமீபத்தில் இயக்குனர் பாரதிராஜா அவர்களின் மகன் மனோஜ் அவர்கள் இறந்து பாரதிராஜா மற்றும் அவரது குடும்பத்தினரை மீளா துயரத்தில் ஆழ்த்தினார். இதே போன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் இளையராஜாவின் வீட்டிலும் அவரது மகள் பவதாரணி இறந்த பொழுது நிகழ்ந்தது.
இயக்குனர் பாரதிராஜா மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா இருவரும் நீண்ட கால நண்பர்கள். இவர்கள் இருவரும் இணைந்து வேலை பார்த்த கடைசி படம்தான் நாடோடி தென்றல். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவே வலம் வந்தனர். இயக்குனர் மற்றும் நடிகரான மனோஜ் இளையராஜா அவர்களின் வீட்டில் தவழ்ந்த விளையாடிய காலங்களும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நெருங்கிய நண்பர்களாக இருந்த நிலையில் மனோஜ் அவர்களின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாத பாரதிராஜா அவர்களுக்கு உடனடியாக ஆறுதல் கூற முடியாமல் காலம் தாழ்த்தி இளையராஜா வரை சந்திக்க சென்று இருக்கிறார்.
ஆறுதல் சொல்வதற்காக சென்ற இடத்தில் அரை மணி நேரம் எதுவும் பேச முடியாமல் இளையராஜா ஒரு புறம் மௌனம் காக்க பாரதிராஜா தன் மகன் இறந்த துயரத்தில் மௌனமாகவே அமர்ந்திருக்கிறார். ஆறுதல் கூற சென்ற இடத்தில் எதையும் பேச முடியாமல் அமைதியாகவே அமர்ந்திருந்த அதன் பின் இளையராஜாவும் அங்கிருந்து கிளம்பி விட்டார். பேசி ஆறுதல் செய்வதை விட பேசாமல் அமைதியாக இருந்து அவர்கள் அருகில் இருப்பது மிகப்பெரிய விஷயம் என சொல்லாமல் இளையராஜா அமைதியாக இருந்து வந்து விட்டார் என வலைதளங்களில் பரவி வருகிறது.