அஜித்துடன் ஜோடி சேரும் விஜய் பட நாயகி ???

Photo of author

By Parthipan K

தமிழ், தெலுங்கு படங்கள் எல்லாம் வேண்டாம் என்று பாலிவுட்டில் செட்டிலான இலியானாவின் பார்வை தற்போது மீண்டும் தென்னிந்திய படங்கள் பக்கம் திரும்பியுள்ளது. பாலிவுட்டில் செட்டிலான அவரால் அங்கு முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற முடியவில்லை. இருப்பினும் நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்.

அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை இலியானா ஈர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தான் இலியானா அஜித்திற்கு ஜோடியாக “வலிமை” படத்தில் நடிக்கப் போவதாக பேசப்பட்டு வருகிறது..

“நேர்கொண்ட பார்வை” படத்தை அடுத்து அஜித் மற்றும் H. வினோத் இணையும் “வலிமை.” படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று முன்தினம் ஹைராபாத்தில் துவங்கியது. அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் வலிமை படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை யாமி கவுதம் நடிப்பதாக பேசப்பட்டது.

இந்நிலையில் யாமி அல்ல இலியானா நடிக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவலை போனி கபூர் உறுதி செய்யவில்லை. முன்னதாக இலியானா விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்திருந்தார்.