மாற்றுத்திறனாளிகளுக்கு இனி தேர்தலில் போட்டி இல்லமலையே பதவி!! தமிழக அரசு மாஸ் அறிவிப்பு!!

Photo of author

By Rupa

மாற்றுத்திறனாளிகளுக்கு இனி தேர்தலில் போட்டி இல்லமலையே பதவி!! தமிழக அரசு மாஸ் அறிவிப்பு!!

Rupa

Updated on:

Illamalai is competing for the differently abled election!! Tamil Nadu Government Mass Notification!!

TN Gov: தமிழகத்தின் 2025 மற்றும் 26 யின் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு துறை சார்ந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அந்த வகையில், மாற்றுத்திறனாளிகளுடைய நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கும் பட்சத்தில் தங்களின்மகன் மற்றும் மகள் திருமணத்தின் போது உதவித்தொகை 2000 ஆக கொடுக்கப்பட்டு வந்தது. இதனை தற்பொழுது 5000 ஆக உயர்த்தியுள்ளனர். மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகள் யாரேனும் உயிரிழந்தால் அவர்களின் இறுதி சடங்கு செய்வதற்காக 17,000 ரூபாயிலிருந்து 30000 அதிகரித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மரபணு ரீதியான தசை சிதைவு மற்றும் முதுகு தண்டுவடம் பாதிப்பால் குறைபாடடைந்தவர்கள் தங்களின் நிற்க உபாதைகளை கழிக்கும் வகையில் சர்க்கரை நாற்காலி வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ளனர். இது ரீதியாக 1.20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆயிரம் பேருக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். அதேபோல மாற்றுத்திறனாளிகள் அரசு தேர்வுகளில் நான்கு சதவீத இட ஒதுக்கீடு கொடுத்ததில் இருந்து தற்போது வரை 1493 பேர் வேலை பெற்றுள்ளதாக கூறியுள்ளனர். இதனையும் தாண்டி இரண்டு புதிய சட்ட மசோதாக்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அதில் உள்ளாட்சி அமைப்புகளில் வரும் தேர்தலில் போட்டியிடாமல் நேரடியாகவே மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்யலாம் என்று கூறியுள்ளனர். சமூகத்தில் இவர்களின் அதிகாரத்தை உயர்த்துவதற்காகவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டதாக கூறியுள்ளனர். தற்போது வரை இத்திட்டத்தின் மூலம் 35 பேர் தேர்வு செய்துள்ள நிலையில், இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் பொழுது கிட்டத்தட்ட 650 மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சியிலும், மேற்பட்டோர் கிராம பஞ்சாயத்திலும் இதேபோல ஊராட்சி ஒன்றியம் மாவட்ட ஊராட்சி உள்ளிட்டவர்களில் நியமன செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்த திட்டமானது அவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அமையும் என்று தெரிவித்துள்ளார்.