சட்ட விரோத பட்டாசு ஆலை வெடி விபத்து! மன்னிப்பு கேட்ட முதலமைச்சர்!!

Photo of author

By Sakthi

சட்ட விரோத பட்டாசு ஆலை வெடி விபத்து! மன்னிப்பு கேட்ட முதலமைச்சர்!
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று வந்த சட்ட விரோத பட்டாசு ஆலை வெடித்ததில் விபத்து ஏற்பட்டு 12 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்டுள்ளார்.
மேற்கு வங்காள மாநிலம் புர்பா மேதினிப்பூர் மாவட்டத்தில் ஏக்ரா பகுதியில் சட்ட விரோத பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து வெடிவிபத்தில் காயமடைந்த ஏக்ரா பகுதி மக்களை முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் இன்று சந்தித்தார். அவர்களை சந்தித்து முதல்வர் மம்தா பானய்ஜி அவர்கள் ஏற்பட்ட வெடி விபத்திற்காக மன்னிப்பு கேட்டார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி “சட்ட விரோதமாக நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்திற்காக தலை வணங்கி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உளவுத்துறை சரியாக செயல்பட்டிருந்தால் இந்த வெடி விபத்தை தடுத்திருக்கலாம்” என்று கூறினார்.
இதையடுத்து வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு 2.5 லட்ச ரூபாய்க்கான இழப்பீட்டு காசோலையை வழங்கினார். குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சமும் வழங்கினார். மேலும் குண்டு வெடிப்பில் பலியானோர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு காவலர் பணி நியமன ஆணையும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி வழங்கியுள்ளார்.