டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கொண்டாட்டத்தில் குடிமகன்கள்!

Photo of author

By Sakthi

நேற்றைய தினம் டாஸ்மாக் நிர்வாகத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு பல அதிரடி உத்தரவுகளை டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்து இருக்கின்றார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கிறது. புகார்கள் மீது உடனடியாக மாவட்ட மேலாளர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார்.

மாவட்ட மேலாளர்கள் மீது அதிக அளவில் முறைகேடு புகார்கள் வருகின்றது. அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்து இருக்கின்றார். தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற மதுபான கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுபான கடைகளில் 90 தினங்களை கடந்த மது வகைகளை இருப்பு வைத்திருக்கக் கூடாது. இருக்கின்ற மதுபானங்களை உடனடியாக விற்பனை செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருக்கிறார்.

மதுபான கடைகளை பிறந்தவுடன் மேற்பார்வையாளர் உள்பட பணியில் யார் இருக்கிறார்கள் என்பதை புகைப்படம் எடுத்து தலைமை அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு மாவட்ட மேலாளர்கள் அனுப்ப வேண்டும் என்றும், அவர் தெரிவித்திருக்கிறார். டாஸ்மாக் கடையின் உள்ளே வெளியாட்கள் யாரும் இருக்கக்கூடாது. அதனை அனுமதிக்கவும் கூடாது என்று தெரிவித்திருக்கின்ற அவர் அனுமதி இல்லாமல் யாருக்கும் பணியிட மாற்ற உத்தரவை கொடுக்கக்கூடாது என்றும் தெரிவித்திருக்கிறார்.