தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை எடுத்தவர் இயக்குனர் சங்கர். இவருடைய திரைப்படம் வெளியாகிறது என்றாலே ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை முன்னிறுத்தக்கூடிய நிலையில் அந்த எதிர்பார்ப்புகளையே தவிடு பொடியாக்கி அதைவிட சிறந்த படங்களை கொடுப்பதில் வல்லவராக திகழ்ந்தவர் இயக்குனர் சங்கர்.
ஆனால் சமீப காலமாகவே இவர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2, கேம் சேஞ்சர் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. இதனால் ரசிகர்கள் சற்றே வருத்தம் அடைந்தனர். சூழல் இப்படி இருக்க சட்டவிரோதமாக பண பரிமாற்றம் மேற்கொண்டதாக இயக்குனர் சங்கர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு இயக்குனர் சங்கர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அமலாக்கத்துறை பதிவு செய்த இந்த வழக்கானது மற்றும் இது தொடர்பான விசாரணைகள் நடந்து வரும் நிலையில் முதற்கட்டமாக ரூ.10.11 மதிப்பு இருக்கக்கூடிய அவருடைய 3 சொத்துக்கள் அமலாக்க துறையால் முடக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மேலும் அடுத்த கட்ட வழக்கு விசாரணை நடந்து வருவதாகவும் இன்னும் எவ்வளவு சட்ட விரோதமான பணப் பரிமாற்றம் நடந்திருக்கிறது என்பது அப்பொழுது தான் தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் ஆனது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.