பொள்ளாச்சியில் சட்டவிரோத குட்கா விற்பனை! போலீசில் சிக்கிய நபர்!

0
198
#image_title

பொள்ளாச்சியில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை. போலிசாரிடம் சிக்கிய நபர்.

தடைசெய்யப்பட்ட குட்காவை பொள்ளாச்சியில் சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்த நபரை போலிசார் கைது செய்துள்ளனர். இவரிடம் கிலோ கணக்கில் குட்கா பறிமுதல் சொய்யப்பட்டுள்ளது.

நாட்டில் குட்கா சம்பந்தமான எந்த ஒரு பொருளையும் விற்பனை செய்ய தடை உள்ளது. அதையும் மீறி சில இடங்களில் சில பேர் மறைமுகமாக குட்காவை விற்பனை செய்து கொண்டு இருக்கின்றனர்.

இந்த குட்கா விற்பனை என்பது காலம்காலமாக மறைமுகமாகவும் சட்டத்திற்கு விரோதமாகவும் இருக்கின்றது. பல சட்டங்கள் இருந்தும் எந்தவொரு சட்டத்தாலும் குட்கா விற்பனையை தடுத்து நிறுத்த முடிவதில்லை.

இதற்கு மத்தியில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியின் காந்தி மார்கெட், மார்கெட் சாலை அருகில் சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நேற்று ரோந்து சென்ற பொள்ளாச்சியை சேர்ந்த காவல் துறையினர் சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்யப்படும் இடத்திற்கு சென்று சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்த ராஜேந்திரன் என்பவரை கைது செய்தனர்.

சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்து கைது செய்யப்பட்ட ராஜேந்திரன் பாலகாட்டை சேர்ந்தவர் ஆவார். ராஜேந்திரன் அவர்களிடம் இருந்து சுமார் 8800 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Previous articleதலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்! தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவிப்பு!
Next articleடாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கவின் நடிக்கும் அடுத்த படம்! இயக்குநர் இவர்தான்!