Iluppai Poo benefits: தாய்ப்பால் அதிகரிக்க.. நீரிழிவு நோய்.. இலுப்பை பூவின் மருத்துவ பயன்கள்..!!

Photo of author

By Priya

Iluppai Poo benefits: ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்று நம்மூரில் ஒரு பழமொழி சொல்வது வழக்கம். இந்த பழமொழிக்கு அர்த்தம் என்னவென்று பார்த்தால் சக்கரை ஆலைகள் இல்லாத இடத்தில் சர்க்கரை கிடைப்பது கடினம். ஆனால் அங்கு இலுப்பை மரம் இருந்தால் அதன் பூ மிகவும் இனிப்பு தன்மை வாய்ந்தது. எனவே சக்கரை இல்லாத இடத்தில் இலுப்பை பூவை பயன்படுத்தாலம் என கூறப்படுகிறது.

அந்த வகையில் பாரம்பரிய மரங்களில் ஒன்றாக உள்ள மரம் தான் இந்த இலுப்பை மரம். மாமரம், அரச மரம் போன்று கம்பீரமான தோற்றத்துடன் காணப்படும் இந்த மரம் அவ்வளவு மருத்துவக் குணம் வாய்ந்தது. இந்த மரத்தின் இலை, பூ, காய், கனி எல்லாம் மருத்துவக் குணம் வாய்ந்தது. ஆனால் மற்ற மரங்களை போன்று அதிக அளவில் இந்த மரத்தை தற்போது பார்க்கப்படுவதில்லை. இந்த மரங்களை தற்போது யாரும் அவ்வளவாக நடவு செய்வதில்லை. நாம் இந்த பதிவில் இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் பூ, காய், கனி ஆகியவற்றின் மருத்துவ குணங்கள் பற்றி (iluppai Poo medical benefits in Tamil) காண்போம்.

இலுப்பை பூ பயன்கள்

இலுப்பை பூவை நிழலில் உலர்த்தி அதனை 100 மிலி தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அது 50 மிி வந்தவுடன் காலை வெறும் வயிற்றில் குடித்து வர நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.

பொதுவாக இந்த மரத்தின் விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு பயன்படுத்தி வர வயிறு பிரச்சனைகள் தீரும். மேலும் இந்த இலுப்பை எண்ணெய்யை தீபம் ஏற்ற பயன்படுத்தி வந்தார்கள். இந்த எண்ணெய் தீபம் ஏற்ற ஐஸ்வர்யம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

முக்கியமாக இலுப்பை எண்ணெய்யை சூடாக்கி மூட்டு வலி, இடுப்பு வலி இருந்தால் ஒத்தடம் கொடுத்து வர உடனே சரியாகிவிடும்.

இலுப்பை பூவை கொதிக்க வைத்து குடித்து வந்தால் பசியுன்மை குறையும். மேலும் இந்த பூ அல்லது இலையை குழந்தை பெற்ற தாய்மார்கள் மார்கத்தில் வைத்து வர தாய்ப்பால் அதிகரிக்கும்.

மேலும் இந்த மரத்தின் பட்டையை அரைத்து உடலில் பூசி வந்தால் சொரியாஸ், அழற்சி, அரிப்பு குணமடையும்.

இலுப்பை இலைகள், விதைகள் மூலம் எடுக்கப்படும் பிண்ணாக்கு கால்நடைகளுக்கு நல்ல உணவாக உள்ளது.

மேலும் இந்த பூவை 50 கிராம் எடுத்து அதனை 100 மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து 25 மிலி வந்தவுடன் அதனை எடுத்து தனியாக வைத்து விட வேண்டும். டீ, காபி குடிக்கும் போது சர்க்கரைக்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம்.

இலுப்பை காய்யை பறித்தால் அதில் இருந்து வரும் பாலை காயங்களுக்கு தடவி வந்தால் காயம் குணமாகும்.

iluppai Poo benefits

இந்த மரத்தின் பழங்களை உண்பதற்காக வெளவால்கள் வருவதால் பெரும்பாலும் இந்த மரங்களை யாரும் வளர்க்க முன்வருவதில்லை. அதனால் கூட இந்த மரத்தின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

மேலும் படிக்க: கொழுப்பு கட்டி கரைந்து உடல் எடை குறைய வேண்டுமா? உயிர் கொடுக்கும் உயிர்வேலி கிளுவை..!!