நான் அவருடன் தான் நடிப்பேன் அடம்பிடித்த நடிகை! கழுவி ஊற்றிய ரசிகர்கள்!

0
72

கடந்த 2002ஆம் ஆண்டு முதலில் திரையுலகில் கால் பதித்த நடிகர் தனுஷ் இவரெல்லாம் ஒரு நடிகரா இவரையெல்லாம் நடிப்பதற்கு யாரழைத்தது என்பதைப்போல பலர் விமர்சனம் செய்தார்கள்.

ஆனாலும் அவர் மனம் தளராது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்தார். ஒரு சில திரைப்படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை என்றாலும் பல திரைப்படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தது.குறிப்பாக சுள்ளான், திருடா திருடி, உள்ளிட்ட திரைப்படங்கள் அவருக்கு மாபெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்தது.

இப்படி அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து திரைத்துறையின் உச்ச நட்சத்திரமான தனுஷ் கடந்த 2004ஆம் வருடம் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து கரம் பிடித்தார்.

ஆனால் சமீபத்தில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் தங்களுடைய 18 வருட கால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிவித்தார்கள். இதனால் மிகப்பெரிய சோகத்தில் இருக்கும் தனுஷின் ரசிகர்கள் பலவாறு புலம்பி தள்ளி வருகிறார்கள்.

அத்தோடு கடந்த 18 வருட காலமாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்த தனுஷ் தற்சமயம் மிகுந்த வருத்தத்தில் இருந்து வருகிறாராம். இதன் காரணமாக, அவருடன் நடித்து பிரபலமான ஒரு நடிகை நாம் இருவரும் சேர்ந்து திரைப்படத்தில் நடிக்கலாம் என்று அவருக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கிறார் என சொல்லப்படுகிறது.

இதனையடுத்து நடிகர் தனுஷ் அந்த நடிகையை வேறொரு படத்தில் நடிக்க வைப்பதற்கு சிபாரிசு செய்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இருந்தாலும் அந்த நடிகை நான் தனுஷோடு மட்டுமே சேர்ந்து நடிப்பேன் என்று அடம் பிடித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், கோலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் நீயெல்லாம் ஒரு மனுஷியா? என அந்த நடிகையை சரமாரியாக திட்டியிருக்கிறார்கள். ஏற்கனவே மன வருத்தத்தில் இருக்கும் அவரை எதற்காக இவ்வாறு தொந்தரவு செய்கிறாய் என்று சரமாரியான கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள்.