இணையத்தில் ஏற்பட்ட காதல்! நேரில் பார்க்க சென்ற காதலியை துடிதுடிக்க கொன்ற காதலன் அதிரடி கைது!

0
91

தற்போது யூட்யூப், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என்று பல சமூக வலை தளங்கள் இருக்கின்றன. ஆனாலும் அந்த சமூக வலைதளங்கள் சமூகத்தில் நல்ல விஷயத்திற்காக யாராலும் உபயோகப்படுத்த படவில்லை.

மாறாக பல பாதகமான விஷயங்களுக்கு தான் இந்த சமூக வலைதளங்கள் தற்போது அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தேவையில்லாமல் பல அவதூறு செய்திகளை பரப்புவதும், கலவரத்தை ஏற்படுத்துவதும்தான் இந்த சமூக வலை தளத்தின் தற்போதைய வேலையாக இருந்து வருகிறது.

இது மட்டுமா பல ஆண்களும், பெண்களும், சமூக வலைதளங்களில் முகத்தைப் பார்க்காமலேயே பழகிக்கொண்டு நல்லவரா, கெட்டவரா, என்பதை கூட தெரிந்து கொள்ளாமல் காதல் வலையில் விழுந்து விடுகிறார்கள். இதன்காரணமாக, பலரின் வாழ்க்கை சீரழிந்து விடுகிறது.

அந்த வகையில், இணையதளத்தின் மூலமாக ஏற்பட்ட காதலை நம்பி இங்கிலாந்திற்கு வந்த கனடா நாட்டு இளம்பெண்ணை அவருடைய காதலனே கொலை செய்த சம்பவம் தற்சமயம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

கனடாவில் ஆஷ்லே என்ற ஒரு இளம்பெண் வசித்து வந்திருக்கிறார், இவர் சென்ற வருடம் நவம்பர் மாதம் இணையதளத்தின் மூலமாக ஏற்பட்ட காதலை நம்பி ஜாக் என்ற இளைஞரை பார்ப்பதற்காக இங்கிலாந்துக்கு வந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், தன்னை நம்பி வந்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார்.

இதுதொடர்பாக தகவலறிந்து அவருடைய வீட்டிற்கு வந்த காவல் துறையை சார்ந்தவர்கள் அவரை கைது செய்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நான் தான் அந்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்தேன் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜாக்.