நான் இன்னும் சாகவில்லை நண்பா!! ரசிகரின் கேள்விக்கா பதில் அளித்த இயக்குநர் செல்வராகவன்!!

0
196
#image_title

நான் இன்னும் சாகவில்லை நண்பா!! ரசிகரின் கேள்விக்கா பதில் அளித்த இயக்குநர் செல்வராகவன்!!

தனது ரசிகர் விமர்சித்து பேசியதற்கு இயக்குநர் செல்வராகவன் அவர்கள் நான் இன்னும் சாகவில்லை நண்பரே என்று கூறி அவர் செய்த விமர்சனத்தை ரிடுவீட் செய்துள்ளார்.

காதல் கொண்டேன், என்ஜிகே, ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை போன்ற பல படங்களை இயக்கியுள்ளார் இயக்குநர் செல்வராகவன். தனக்குரிய பாணியில் படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார் இயக்குநர் செல்வ ராகவன்.

இயக்குநர் என்பது தற்போது மறைந்து சமீபகாலமாக படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் இயக்குநர் செல்வராகவன். இயக்குநர் செல்வராகவன் முதலில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த சாணிக்காயிதம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.

பிறகு நடிகர் விஜய் நடிப்பில் சென்ற வருடம் ரிலீஸ் ஆன பீஸ்ட் படத்திலும் இயக்குநர் மோகன் ஜி இயக்கிய பகாசூரன் படத்திலும் நடித்துள்ளார். மேலும் நடிகர் விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிது வருகிறார்.

இதற்கு மத்தியில் காதல் கொண்டேன் படத்தை பார்த்து விட்டு டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் ” விவேக் ஒரு காமெடியில் சொல்லுவார். இயக்குநர் ஒவ்வொரு பிரேமையும்(Frame) செதுக்கியுள்ளார். அப்படி ஒரு படம்தான் காதல் கொண்டேன் படம் இது. அப்படி ஒரு இயக்குநர் தான் செல்வராகவன்” என்று டுவிட் செய்துள்ளார்.

இந்த டுவீட்டை பார்த்த இயக்குநர் செல்வராகவன் அதை ரிடூவ்ட் செய்து “நான் இன்னும் சாகவில்லை. இன்னும் ஓய்வு பெறவும் இல்லை நண்பரே. நான் இப்போது 40 வயதில் தான் இருக்கிறேன். மீண்டும் படம் இயக்குவேன்” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

Previous articleநடப்பு ஐபிஎல் தொடரில் லிட்டன் தாஸ் விலகல்!! அவருக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேனை ஒப்பந்தம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!!
Next articleசென்னையை அலறவிட்ட கொலை சம்பவங்களின் தொகுப்பு!!