ஒரு சிரிப்பிற்காக நான் பட்ட பாடு இருக்கே!! இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்!!

0
10
I'm so tired of laughing!! Director K.S. Ravikumar!!
I'm so tired of laughing!! Director K.S. Ravikumar!!

தமிழ் திரையுலகில் படையப்பா திரைப்படம் ஆனது மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு மட்டுமல்லாது இன்று அறையில் படையப்பா திரைப்படத்திற்கு என ரசிகர் படையும் அதில் நடிக்க ரஜினிகாந்த் அவர்களின் ஸ்டைலை பின்பற்றி ரசிகர் படையும் இருந்து தான் வருகின்றன.

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவாஜி மற்றும் ரஜினிகாந்த் இணைந்த நடிக்க 1999 ஆம் ஆண்டு ஏ எம் ரத்னம் தயாரிப்பில் தயாரிக்கப்பட்டு வெளியானது. திரைப்படத்தில் சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், மணிவண்ணன், நாசர், செந்தில், ரமேஷ் கண்ணா, அப்பாஸ், வடிவுக்கரசி, ராதாரவி என பல திரை பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். குறிப்பாக இத்திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை கண்டது. இப்படி ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான பாடல் ஒன்றில் சிரிப்பிற்காக தான் பட்ட பாடு என்ன என்பதை கே எஸ் ரவிக்குமார் அவர்கள் அழகாக விளக்கி இருக்கிறார்.

சுத்தி சுத்தி வந்தீக பாடல் வரிகளின் நடுவே தான் எதிர்பார்த்தது போன்று ஒரு சிரிப்பு வேண்டும் என்பதற்காக பலமுறை பாடகியிடம் சேர்க்கும் படி இயக்குனர் கேஸ் ரவிக்குமார் அவர்கள் கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறார். ஆனால் என்னால் முடியவில்லை என பாடகி கூறியதற்கு அழகாக பாட மட்டும் முடியும் ஆனால் சிரிக்க முடியாது என்பது என்ன நியாயம் என்பது போல விளையாட்டாக கேட்க பாடகி சிரித்துக்கொண்டே அதற்கு பதில் அளித்திருக்கிறார்.

உடனடியாக ஏ ஆர் ரகுமான் அவர்கள் நீங்கள் நேரடியாக பாடலை பாடுங்கள் என பாடகியிடம் கூறிவிட்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் அவர்களிடம் நீங்கள் அவர்களை விடுங்கள் இதை நான் பார்த்துக்கொள்கிறேன் என தெரிவித்திருக்கிறார். இவர்கள் பேசிய அனைத்தையும் ரெக்கார்ட் செய்த ஏ ஆர் ரகுமான் அவர்கள் பாடலை கனக்கச்சிதமாக தயாரித்து அதில் இயக்குனர் எதிர்பார்த்தது போலவே சிரிப்பையும் உள்ளடக்கி இருக்கிறார். அந்த பாடலை கேட்கும் பொழுது தனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது என்றும் ஏ ஆர் ரகுமான் அவர்கள் மிகப்பெரிய மாயாஜாலக்காரர் என்றும் கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Previous articleகாலேஜ் சேரனும்.. என்ன கோர்ஸ் எடுத்தா நல்ல வேலை கிடைக்கும்னு தெரியலையா!!12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டுதல்!!
Next articleஇலவச ட்ரோன் பயிற்சி முகாம்!! தமிழக அரசின் தொழில் முனைவோர் திட்டம்!!